ஜெயதீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயதீர்த்தர்
பிறப்பு1345
மங்கலவேதம், பண்டரிபுரம் அருகில்,[1]
மகாராட்டிரம் அல்லது மல்கெடா, கருநாடகம்
இயற்பெயர்தந்தோபந்த் ரகுநாதன்
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்திகாசாரியர்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருஅக்சோபிய தீர்த்தர்

ஜெயதீர்த்தர் (Jayatirtha) (அண். 1345 அண். 1388) [2] [3] [4] ), இவர் ஓர் இந்து மதத் தத்துவவாதியாவார். இவர் வாதத்திறமை வாய்ந்தவர். மத்துவப் பீடத்தின் ஆறாவது தலைவராக இருந்தார்(1365 - 1388). மத்வாச்சாரியாரின் படைப்புகளை இவர் தெளிவுபடுத்தியதன் காரணமாக, துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். துவைதத் தத்துவ அம்சங்களை கட்டமைப்பதன் மூலமும், இவர் தனது படைப்புகள் மூலமாகவும், தற்கால சிந்தனைப் பள்ளிகளுடன் சமமான நிலைக்கு அதை உயர்த்திய பெருமைக்குரியவராவார். [5] மத்துவருடனும், வியாசதீர்த்தருடன் சேர்ந்து, இவர் மூன்று பெரிய ஆன்மீகத் துறவிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

ஒரு பிரபுத்துவ மராத்தி பேசும் [6] தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். [7] பின்னர் இவர் மத்துவத் துறவியான அக்சோபிய தீர்த்தருடனான ஒரு சந்திப்புக்குப் பிறகு துவைதத் தத்துவதை ஏற்றுக்கொண்டார் (1365 [8] ). இவர் 22 படைப்புகளை இயற்றினார். அதில் மத்த்வரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் மற்றும் சமகால பள்ளிகளின் கொள்கைகளை விமர்சிக்கும் பல சுயாதீன கட்டுரைகள், குறிப்பாக அத்வைதம், ஒரே நேரத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறுகின்றன. இவரது இயங்கியல் திறன் மற்றும் தர்க்கரீதியான புத்திசாலித்தனம் இவருக்கு திகாச்சார்யர் அல்லது வர்ணனையாளர் சிறப்பைப் பெற்றுத் தந்தது. [9]

படைப்புகள்[தொகு]

இவர் படைத்த 22 படைப்புகள் உள்ளன. அவற்றில் 18 படைப்புகள் மத்வாச்சாரியரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் ஆகும். [10] மத்துவரின் அனு வியாக்யானத்தின் வர்ணனையான "நியாய சுத்தம்" என்பது, இவரது மகத்தான பணியாக கருதப்படுகிறது. 24,000 வசனங்கள் வரை இருக்கும், இது இந்து மதத்தின் மரபுவழி பள்ளிகளான மீமாஞ்சம் மற்றும் நியாயம் போன்ற பௌத்தம் மற்றும் சமண மதம் போன்ற பலதரப்பட்ட பள்ளிகள் வரை, துவைதத்திற்கு ஆதரவாக வாதிடும் பல்வேறு தத்துவஞானிகளையும் அவர்களின் தத்துவங்களையும் விவாதித்து விமர்சிக்கிறது. [11] வர்ணனைகளைத் தவிர, பிரமாண வழக்கங்களின் நான்கு அசல் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். [12]

மரபு[தொகு]

துவைத இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். இவரது எழுத்தின் தெளிவும் அளவிடப்பட்ட பாணியும், இவரது தீவிரமான இயங்கியல் திறனும் இவரது படைப்புகளை காலப்போக்கில் சுற்றிக் கொள்ள அனுமதித்துள்ளது. இது பிற்கால தத்துவஞானிகளான வியாசதீர்த்தர், இரகோத்தம தீர்த்தர், இராகவேந்திர தீர்த்தர் மற்றும் வாதிராஜ தீர்த்தர் ஆகியோரின் வர்ணனைகளால் வலுப்படுத்தியது. சமசுகிருத வல்லுந்ரான தாசுகுப்தா என்பவரின் கூற்றுப்படி, "ஜெயதீர்த்தரும் வியாசதீர்த்தரும் இந்திய சிந்தனையில் மிக உயர்ந்த இயங்கியல் திறனை முன்வைக்கின்றனர்". [5] இவரது தலைசிறந்த படைப்பான நியாய சுத்தம் அல்லது நெக்டர் ஆஃப் லாஜிக், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு கலைக்களஞ்சிய தத்துவங்களை மறுப்பதைக் குறிக்கிறது. சமசுகிருத வரலாற்றாசிரியர் பெரேரா "இவரது நினைவுச்சின்ன நெக்டர் ஆஃப் லாஜிக், இந்திய இறையியல் சாதனைகளின் உச்சங்களில் ஒன்றாகும்" எனக் குறிப்பிடுகிறார். [13]

பிருந்தாவனம்[தொகு]

இவரது கல்லறையின் இருப்பிடம் குறித்து அறிவார்ந்த கருத்து பிரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சான்றுகள் மல்கெடாவை இவரது பிருந்தாவனமாகக் கருதுகிறது. அதே நேரத்தில் வரலாற்று ஆதாரங்களும், வாதிராஜ தீர்த்தரின் தீர்த்தப்பிரபந்தமும் நவ பிருந்தாவனத்தை உண்மையான இருப்பிடமாக சுட்டிக்காட்டுகின்றன என்று சிலர் கூறுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

 1. Sharma 2000, ப. 246.
 2. Chang 1991, ப. xviii.
 3. Sharma 1986, ப. xviii.
 4. Leaman 2006, ப. 177.
 5. 5.0 5.1 Dasgupta 1991, ப. viii.
 6. Sharma 2000, ப. 537.
 7. Sharma 2000, ப. 247.
 8. Sharma 2000, ப. 208.
 9. Sharma 2000, ப. 236.
 10. Sharma 2000, ப. 249.
 11. Sharma 2000, ப. 330.
 12. Sharma 2000, ப. 337.
 13. Pereira 1976, ப. 123.

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயதீர்த்தர்&oldid=3582345" இலிருந்து மீள்விக்கப்பட்டது