தம்பிடி
Appearance
(இந்தியப் பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தம்பிடி அல்லது பை ( pie அல்லது சுருங்க Ps) 1947க்கு முன்னர் இந்தியா, மியான்மர், பாக்கித்தானில் புழங்கி வந்த நாணயம் ஆகும். இதுவே மிகவும் குறைந்த நாணய அலகாக இருந்தது. மூன்று பைக்கள் ஒரு பைசா வாகும்; 12 பைக்கள் ஓரணா ஆகும்; 192 தம்பிடிகள் ஒரு ரூபாய் ஆகும்.[1] பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு பை 12 சோழிகளாக இருந்தது.
பைக்களை பதிப்பிப்பது 1942இல் கைவிடப்பட்டது. இருப்பினும் 1947 வரை அது புழக்கத்தில் இருந்தது. 1947இல் பணவீக்கம் காரணமாக பை நாணயம் வழக்கிலிருந்து விலக்கப்பட்டது.[note 1][2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1966 வரை இந்தியாவின் ரூபாய் இசுடெர்லிங்குடன் பிணைக்கப்பட்டிருந்தது; (அப்போது நாணய மாற்று ஒரு ரூபாய் = 18 பழைய பென்னிகள்). 1947இல் பழைய பிரித்தானியப் பென்னி 2014 மதிப்பீடின்படி14 புதிய பென்னிகளுக்கு சமமாக இருந்தது; எனவே பையின் மதிப்பு 1.3 பென்னியாக 2014இல் இருந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ ராஜன் (17 நவம்பர் 2014). "காசு..பணம்..துட்டு..மணி..மணி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2017.
- ↑ Schedule of Par Values, Currencies of Metropolitan Areas, The Statesman's Year Book 1947, pg xxiii, Macmillan & Co.