உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) ஒரு மத்திய பொது பல்கலைக்கழகம் ஆகும், இது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ளது. இது 1920 இல் பிரித்தானிய ஆட்சியின் போது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் நிறுவப்பட்டது. இது 1988 இல் இந்திய நாடாளுமன்றம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது.

உருது மொழியில், ஜாமியா என்றால் பல்கலைக்கழகம், மில்லியா என்றால் தேசியம் என்று பொருள்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஒரு பன்முக கல்வி முறையினை வழங்குகின்றது. இது பள்ளிப்படிப்பு, இளங்கலை, முதுகலை, எம்.பில் / பி.எச்.டி மற்றும் பிந்தைய முனைவர் கல்வி ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. 9 கற்றல் பீடங்கள், 39 கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறைகள் மற்றும் 27 க்கும் மேற்பட்ட கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் செயல்பட்டு வருகின்றது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. https://www.jmi.ac.in/aboutjamia/centres ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் கல்வி குழுமம்

இணைப்புகள்

[தொகு]