அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி
Jump to navigation
Jump to search

அசோகரின் சிங்கத் தூண்கள், சாரநாத்
சாரநாத்தில் மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும், ஸத்யமேவ ஜயதே என்ற சமக்கிருதச் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய அரசின் இலச்சினையாகவும் உள்ளது. [1]