கங்கை டால்பின்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Holozoa
தென்னாசிய ஆற்று டால்பின்கள்
Ganges river dolphin skeleton.jpg
கங்கை நதி டால்பின் மண்டை ஒடு பிரதி
South Asian river dolphin size comparison.svg
அளவீல் ஓப்பீடும்பொழுது சராசரியாக மனிதனைப் போன்று இருக்கும்
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
பின்வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: கங்கை டால்பின்கள்
John Edward Gray, 1846
பேரினம்: கங்கை டால்பின்கள்
Wagler, 1830
இனம்: P. gangetica
இருசொற் பெயரீடு
Platanista gangetica
(Lebeck, 1801); (Roxburgh, 1801)
துணையினம்

Platanista gangetica gangetica
Platanista gangetica minor

Cetacea range map South Asian river dolphin.png
கங்கை நதி டால்பின் மற்றும்சிந்து நதி டால்பின் எல்லைப் பகுதிகள்

தென்னாசிய ஆற்று டால்பின்கள் (Platanista gangetica) ஒரு நன்னீர் டால்பின் வகையினமாகும், இது இந்தியா, பங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிசுதானில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை டால்பின் (P. g. gangetica) மற்றும் சிந்து நதி டால்பின் (P. g. minor).[2] 1970 முதல் 1998 வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 இல் அவை தென்னாசிய ஆற்று டால்பின்களின் கிளை இனமாக வகை படுத்தப்பட்டன.(see taxonomy below). கங்கை நதி டால்பின் பெரும்பாலும் கங்கை மற்றூம் பிரம்மபுத்திரா நதிகள் பாயும் பிரதேசங்களான நேபாளம், இந்தியா, பங்களாதேசம் பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து நதி டால்பின் பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளில் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு, கங்கை டால்பின்கள் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது.[3] சிந்து நதி டால்பினை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது.[4] மேலும், கங்கை நதி டால்பினை குவகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.[5]

கங்கை டால்பின்கள் அல்லது தென்னாசிய ஆற்று டால்பின்கள் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா நதிகளிலும் அவற்றின் கிளை நதிகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் கங்கை டால்பின்கள் பார்வையற்றவை.  தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.[6]

அச்சுறுத்தல்கள்[தொகு]

மனிதத் தொடர்பு[தொகு]

கங்கை டால்பின்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் டால்பின்கள் அதிகம். மேலும் இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.[6]

சுற்றுச்சூழல் மாசுப்பாடு[தொகு]

தொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் நதி அருகே பயன்படுத்தப்படுகின்றன. அவை நதிநீரை மாசுபடுத்தி நதியின் பல்வேறு ஜீவராசிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுப்பாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் டால்பின்களை கொல்ல முடியும், மற்றும் முற்றிலும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_டால்பின்கள்&oldid=2193814" இருந்து மீள்விக்கப்பட்டது