பெங்களூரா மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரா மாம்பழம்

பெங்களூரா மாம்பழம் என்பது தென்னிந்தியாவில் விளையும் மாம்பழங்களில் ஒரு வகையாகும்.[1] இதற்கு தோத்தாபூரி, கலெக்டர், கல்லாமை, சுந்தர்சா, கிளி மூக்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.[2] இவ்வகை மாமரம் வீரியத்துடன் ஆண்டுதோறும் சீரான விளைச்சல் தரக்கூடியது. இதன் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டதால் இதன் காயை விரும்பி உண்பார்கள்.இதன் பழங்கள் பெரியதாகவும், இளம் மஞ்சள் நிற சதைப்பற்றுக் கொண்டது. சாறு குறைவாகவும்,நார் இல்லாமலும் இருக்கும். கெட்டியான சதைப்பற்றுள்ளதால் மாம்பழக் கூழ் தயாரிக்க தொழிற்சாலைக்கு ஏற்ற இரகமாக விளங்குகிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூரா_மாம்பழம்&oldid=3777668" இலிருந்து மீள்விக்கப்பட்டது