சூரியகாந்தி விதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது: உறை/உமி நீக்கப்பட்டது. வலது: உறை/உமி நீக்காதது
சூரியகாந்தி விதை உட்கரு, உலர்ந்தது
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்2,385 kJ (570 kcal)
18.76 g
சீனி2.62 g
நார்ப்பொருள்10.5 g
49.57 g
நிறைவுற்றது5.20 g
ஒற்றைநிறைவுறாதது9.46 g
பல்நிறைவுறாதது32.74 g
புரதம்
22.78 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(199%)
2.29 mg
ரிபோஃபிளாவின் (B2)
(21%)
0.25 mg
நியாசின் (B3)
(30%)
4.5 mg
(135%)
6.75 mg
உயிர்ச்சத்து பி6
(59%)
0.77 mg
இலைக்காடி (B9)
(57%)
227 μg
உயிர்ச்சத்து சி
(2%)
1.4 mg
உயிர்ச்சத்து ஈ
(230%)
34.50 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(12%)
116 mg
இரும்பு
(52%)
6.77 mg
மக்னீசியம்
(100%)
354 mg
மாங்கனீசு
(96%)
2.02 mg
பாசுபரசு
(101%)
705 mg
பொட்டாசியம்
(15%)
689 mg
சோடியம்
(0%)
3 mg
துத்தநாகம்
(53%)
5.06 mg
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் உண்மையான வித்து அல்லது பருப்பும் (Kernal) காணப்படுகின்றது. மேலோடானது சுற்றுகனியத்தாலான, கிட்டத்தட்ட 20 - 25 % ஐக் கொண்டதாகவும், உள்ளான பருப்பின் பகுதி முளையத்தைக் கொண்ட விதையாகவும் இருக்கும்[1]. சூரியகாந்திப் பழமே சூரியகாந்தி விதை எனப்படுவதனால், இந்த மேலோடானது உமி என அழைக்கப்படுகின்றது. இது தாவரவியல் அடிப்படையில் வெடியா உலர்கனி (Achene) எனும் பகுப்பிற்குள் அடங்கும்.

உமி நீக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். பருப்பானது நொறுக்குத்தீனியாக உண்ணப் பயன்படும். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பல உயிர்ச்சத்துக்கள், கனிமங்களைக் கொண்டது[2][3]. உயிரணுக்கள் தாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளான[4] உயிர்ச்சத்து ஈயை அதிகளவு கொண்டிருக்கின்றது[3].

உமி நீக்கப்பட்ட நிலையிலும், நீக்கப்படாத நிலையிலும் இது கடைகளில் விற்பனைக்கு விடப்படும். இதில் கிடைக்கும் உமியானது உயிரி எரிபொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும். இந்த சூரியகாந்தி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெயும் விற்பனைக்கு விடப்படும்.

பயிரிடல்[தொகு]

உச்ச சூரியகாந்தி விதை உற்பத்தியாளர்கள் - 2005
ஆதாரம்: ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO)[5]
நிலை நாடு 106 டன் பரப்பளவு (கிமி²)
1  உருசியா 6.3 1,70,75,400
2  உக்ரைன் 4.7 6,03,700
3  அர்கெந்தீனா 3.7 27,80,400
4  சீனா 1.9 95,98,086
5  இந்தியா 1.9 31,66,414
6  ஐக்கிய அமெரிக்கா 1.8 96,29,091
7  பிரான்சு 1.5 6,32,759
8  அங்கேரி 1.3 93,028
9  உருமேனியா 1.3 2,38,391
10  துருக்கி 1.0 7,83,562
11  பல்கேரியா 0.9 1,10,993
12  தென்னாப்பிரிக்கா 0.7 12,21,037
உலக மொத்தம் 31.1

ஊட்டச்சத்துப் பெறுமதி[தொகு]

லினோலெயிக் அமிலத்தையும்விட [6]மேலதிகமாக, சூரியகாந்தி விதைகள் சிறந்த உணவுக்குகந்த நார்ப்பொருள் மூலங்கள், சில அமினோ அமிலம், உயிர்ச்சத்து ஈ, உயிர்ச்சத்து பி மற்றும் உணவுக்குகந்த கனிமங்களான செப்பு, மாங்கனீசு, பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, பாசுபரசு, செலீனியம், கல்சியம், துத்தநாகம் ஆகியவற்றையும்[7] கொண்டுள்ளது.[8]

குறிப்புக்கள்[தொகு]

  1. Growth and development of sunflower fruits under shade during pre and early post-anthesis period
  2. Comparison to Other Seeds, Nuts & Fruits
  3. 3.0 3.1 "Sunflower Seeds, The World Healthiest Foods". 2018-08-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-12 அன்று பார்க்கப்பட்டது.
  4. Antioxidants and Cancer Prevention: Fact Sheet,National Cancer Institute
  5. "Major food and agricultural commodities and producers". FAO. 2011-03-27 அன்று பார்க்கப்பட்டது.
  6. சூரியகாந்தி விதை
  7. Sunflower seeds
  8. "WHFoods: Sunflower seeds". 2018-08-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியகாந்தி_விதை&oldid=3555341" இருந்து மீள்விக்கப்பட்டது