உள்ளடக்கத்துக்குச் செல்

லினோலெயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்ப்புரு:Chembox CMC HLB (set)
லினோலெயிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஒருபக்க, ஒருபக்க-9,12-ஆக்டாடெகாடையீனோயிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
கொழுமிய எண்: C18:2
இனங்காட்டிகள்
60-33-3 Y
ChEBI CHEBI:17351 N
ChEMBL ChEMBL267476 Y
ChemSpider 4444105 Y
InChI
 • InChI=1S/C18H32O2/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20/h6-7,9-10H,2-5,8,11-17H2,1H3,(H,19,20)/b7-6-,10-9- Y
  Key: OYHQOLUKZRVURQ-HZJYTTRNSA-N Y
 • InChI=1/C18H32O2/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20/h6-7,9-10H,2-5,8,11-17H2,1H3,(H,19,20)/b7-6-,10-9-
  Key: OYHQOLUKZRVURQ-HZJYTTRNBX
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01595 Y
 • CCCCC/C=C\C/C=C\CCCCCCCC(=O)O
UNII 9KJL21T0QJ Y
பண்புகள்
C18H32O2
வாய்ப்பாட்டு எடை 280.45 g·mol−1
தோற்றம் வண்ணமற்ற எண்ணெய்
அடர்த்தி 0.9 கி/செமீ 3[2]
உருகுநிலை −5 °செ (23 °ஃபா) [3]
−12 °செ (10 °ஃபா)[2]
கொதிநிலை 230 °C (446 °F) - 21 மில்லி பார்[3]
230 °C (446 °F) -16 மிமீ பாதரசம்[2]
0.139 மிகி/லி[3]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 112 °C (234 °F)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

லினோலெயிக் அமிலம் [Linoleic acid (LA)] ஒரு நிறைவுறா ஒமேகா-6 (n-6) கொழுப்பு அமிலமாகும். அறைவெப்பநிலையில் இது வண்ணமற்ற திரவமாக உள்ளது. இதனுடைய கொழுமிய எண்: 18:2(n-6). லினோலெயிக் அமிலம் பதினெட்டு கார்பன் அணுக்களையும், இரண்டு ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும்; மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவில் முதலாவது இரட்டைப் பிணைப்பு உள்ளது[4].

லினோலெயிக் அமிலம் மனிதர்களும், விலங்குகளும் பல்வேறு உயிரியல் பணிகளைச் செய்ய தேவையான, பிற தளப்பொருள்களிலிருந்து தேவையான அளவு உருவாக்க முடியாத, உணவிலிருந்து கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தது[5].

பல்நிறைவுறா கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம், அராகிடோனிக் அமிலம் (AA) உயிரித்தொகுப்பிலும், அதன் மூலமாக சில புரோஸ்டாகிளாண்டின்களின் (PG) உயிரித்தொகுப்பிலும் உபயோகப்படுகிறது. லினோலெயிக் அமிலம் செல்சவ்வுகளின் கொழுமியத்தில் காணப்படுகிகிறது. பல தாவர எண்ணெய்களில் (கசகசா, குசம்பப்பூ எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்) இந்த அமிலம் ஏராளமாக (எடையில் பாதிக்கும் மேலாக) உள்ளது[6].

உடல் நலத்திற்கு இன்றியமையாக் கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம் தேவைப்படுகின்றது. ஆய்வுகளில், லினோலெயிக் அமிலக் குறைபாடு கொண்ட உணவினை உட்கொண்ட எலிகள் மிதமான தோல் தடித்தல், முடி உதிர்வு[7] மற்றும் குறைந்த காயம் ஆறும் தன்மையினைக் கொண்டிருந்தன[8]. ஆனால், சாதாரணமாக உட்கொள்ளும் உணவின் மூலமாகவே நமக்குத் தேவையான லினோலெயிக் அமிலம் கிடைத்து விடுவதால் இதன் குறைபாடு என்பது மிக அரிதாகும். எனவே, மருத்துவத்தை நாடும் நிலைமைக் கிடையாது.

ஒலெயிக் அமிலத்துடன் லினோலெயிக் அமிலத்தையும் கரப்பான் பூச்சிகள் இறக்கும்போது, பிற கரப்பான்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுக்க, வெளிவிடுகின்றன. இதைப்போலவே எறும்புகளும், தேனீக்களும் இறக்கும்போது ஒலெயிக் அமிலத்தை வெளிவிடுகின்றன[9].

லினோலெயிக் அமிலத்தின் வளர்சிதைமாற்ற படிகள்

உணவு மூலங்கள்[தொகு]

Name % லினோலெயிக் அமிலம் மேற்கோள்கள்
குசம்பப்பூ எண்ணெய் 78%
கொடிமுந்திரி விதை எண்ணெய் 73%
அபினி விதை (கசகசா) எண்ணெய் 70%
சூரியகாந்தி எண்ணெய் 68%
சணல் எண்ணெய் 60%
சோள எண்ணெய் 59%
கோதுமை முளை எண்ணெய் 55%
பருத்தி விதை எண்ணெய் 54%
சோயா அவரை எண்ணெய் 51%
வாதுமை எண்ணெய் 51%
நல்லெண்ணெய் 45%
அரிசித் தவிட்டு எண்ணெய் 39%
பசுங்கொட்டை (பிஸ்தா பருப்பு) எண்ணெய் 32.7%
கடலை எண்ணெய் 32% [10]
காட்டுக்கடுகு எண்ணெய் 21%
கோழிக் கொழுப்பு 18-23% [11]
முட்டையின் மஞ்சள் கரு 16%
ஆளிவிதை எண்ணெய் 15%
பன்றிக் கொழுப்பு 10%
ஆலிவ் எண்ணெய் 10%
புல்லின மர எண்ணெய் 10%
கொக்கோ வெண்ணெய் 3%
மகடாமியா கொட்டை எண்ணெய் 2%
வெண்ணெய் 2%
தேங்காய் எண்ணெய் 2%
  சராசரி அளவு

மேற்கோள்கள்[தொகு]

 1. Beare-Rogers (2001). "IUPAC Lexicon of Lipid Nutrition" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2006-02-22.
 2. 2.0 2.1 2.2 The Merck Index, 11th Edition, 5382
 3. 3.0 3.1 3.2 3.3 Record of CAS RN 60-33-3 in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
 4. David J. Anneken, Sabine Both, Ralf Christoph, Georg Fieg, Udo Steinberner, Alfred Westfechtel "Fatty Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a10_245.pub2
 5. Burr, G.O., Burr, M.M. and Miller, E. (1930). "On the nature and role of the fatty acids essential in nutrition". J. Biol. Chem. 86 (587): 1–9. http://www.jbc.org/cgi/reprint/97/1/1.pdf. பார்த்த நாள்: 2012-01-08. 
 6. U.S. Department of Agriculture, Agricultural Research Service. 2007. USDA National Nutrient Database for Standard Reference, Release 20. Nutrient Data Laboratory Home Page
 7. Cunnane S, Anderson M (1 April 1997). "Pure linoleate deficiency in the rat: influence on growth, accumulation of n-6 polyunsaturates, and (1-14C) linoleate oxidation". J Lipid Res 38 (4): 805–12. பப்மெட்:9144095. http://www.jlr.org/cgi/reprint/38/4/805. பார்த்த நாள்: 2007-01-15. 
 8. Ruthig DJ & Meckling-Gill KA. (1 October 1999). "Both (n-3) and (n-6) fatty acids stimulate wound healing in the rat intestinal epithelial cell line, IEC-6". Journal of Nutrition 129 (10): 1791–8. பப்மெட்:10498749. http://jn.nutrition.org/cgi/content/full/129/10/1791. பார்த்த நாள்: 2007-01-15. 
 9. BBC - Earth News - Ancient 'smell of death' revealed
 10. Oil, peanut, salad or cooking: search for peanut oil on http://www.nal.usda.gov/fnic/foodcomp/search/ பரணிடப்பட்டது 2015-03-03 at the வந்தவழி இயந்திரம்
 11. M. K. Nutter, E. E. Lockhart and R. S. Harris (1943). "The chemical composition of depot fats in chickens and turkeys". Journal of the American Oil Chemists' Society 20 (11): 231–234. http://www.springerlink.com/content/0837289583682243/. பார்த்த நாள்: 2012-01-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லினோலெயிக்_அமிலம்&oldid=3362023" இலிருந்து மீள்விக்கப்பட்டது