அரிசித் தவிட்டு எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) என்பது அரிசியின் தவிட்டில் இருந்து எடுக்கப்படும் ஒரு சமையல் எண்ணெய். இது சீனா, சப்பான் போன்ற நாடுகளில் பரவலாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரைசனால் என்னும் பொருள் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதால் இதயநோய் வராமல் இருக்க உதவும் என்று கருதப்படுகிறது. தமிழகத்திலும் அரிசித் தவிட்டு எண்ணெய் கிடைக்கிறது.