திராட்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவப்புத் திராட்சை

திராட்சை, இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினாகிரி, வைன், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.

திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6 தொடக்கம் 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கடும் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.

திராட்சை, சிவப்பு அல்லது பச்சை
Nutritional value per 100 g (3.5 oz)
Energy 288 kJ (69 kcal)
18.1 g
சீனி 15.48 g
Dietary fiber 0.9 g
0.16 g
புரதம்
0.72 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(6%)
0.069 mg
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.07 mg
நியாசின் (B3)
(1%)
0.188 mg
line-height:1.1em
(1%)
0.05 mg
உயிர்ச்சத்து பி6
(7%)
0.086 mg
இலைக்காடி (B9)
(1%)
2 μg
கோலின்
(1%)
5.6 mg
உயிர்ச்சத்து சி
(4%)
3.2 mg
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.19 mg
உயிர்ச்சத்து கே
(14%)
14.6 μg
Trace metals
கல்சியம்
(1%)
10 mg
இரும்பு
(3%)
0.36 mg
Magnesium
(2%)
7 mg
மாங்கனீசு
(3%)
0.071 mg
பாசுபரசு
(3%)
20 mg
பொட்டாசியம்
(4%)
191 mg
சோடியம்
(0%)
2 mg
துத்தநாகம்
(1%)
0.07 mg
Other constituents
Fluoride 7.8 µg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

திராட்சை மதுபானங்களின் வகைகள்[தொகு]

பெரும்பாண்மையனா திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,

  • வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த ""விட்டிஸ் லபுர்ஸ்கா""
  • வட அமெரிக்காவை சேர்ந்த ""விட்டிஸ் ரிபர்சியா""
  • தென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் ""லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா""
  • ஆசியாவை சேர்ந்த "லிட்டிஸ் அமெரென்சிஸ்"

திராட்சைக் கொடிகள்[தொகு]

வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், விட்டிஸ் லபுருஸ்கா (Vitis labrusca), விட்டிஸ் ரிப்பாரியா (Vitis riparia), விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா (Vitis rotundifolia), விட்டிஸ் அமுரென்சிஸ் (Vitis amurensis) போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.

பரவலும் செய்கையும்[தொகு]

லெபனானில் உள்ள ஐத்தா அல் பூக்கர் என்னும் ஊரில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டம்
திராட்சைக் கொடிகள்

உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.

கீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கைப் பரப்பளவின் அடிப்படையில் திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்
நாடு பரப்பளவு (km²)
 Spain 11,750
 France 8,640
 Italy 8,270
 Turkey 8,120
 United States 4,150
 Iran 2,860
 Romania 2,480
 Portugal 2,160
 Argentina 2,080
 Chile 1,840
 Australia 1,642
 Armenia 1,459
வருடத்தின் அடிப்படையில் அதிகம் திராட்சை உற்பத்தி செய்யும் நாடுகள்
(மில்லியன் மெற்றிக் தொன்களில்)
தரவரிசை நாடு 2009 2010 2011
1  China 8,038,703 8,651,831 9,174,280
2  Italy 8,242,500 7,787,800 7,115,500
3  United States 6,629,198 6,777,731 6,756,449
4  France 6,101,525 5,794,433 6,588,904
5  Spain 5,535,333 6,107,617 5,809,315
6  Turkey 4,264,720 4,255,000 4,296,351
7  Chile 2,600,000 2,903,000 3,149,380
8  Argentina 2,181,567 2,616,613 2,750,000
9  Iran 2,305,000 2,225,000 2,240,000
10  Australia 1,797,012 1,684,345 1,715,717
உலகம் 58,521,410 58,292,101 58,500,118
மூலம்: ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புவேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

உலர்ந்த திராட்சை[தொகு]

உலர்ந்த திராட்சை

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

திராட்சைச் சாறு[தொகு]

திராட்சைப் பழத்தைப் பிழிந்து கலந்து திரவமாக்குவதன் மூலம் திராட்சைச் சாறு உற்பத்திசெய்யப்படுகின்றது. இச்சற்றுக் கலவையில் 7-23% திராட்சையின் கூழ், தோல், காம்பு, விதை என்பவற்றைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராட்சை&oldid=1795084" இருந்து மீள்விக்கப்பட்டது