ஆளி (செடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆளி
Flax
cotton flax
cotton flax
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு Magnoliopsida
வரிசை: Malpighiales
குடும்பம்: லினாசீ (Linaceae)
பேரினம்: லினம் (Linum)
இனம்: L. usitatissimum
இருசொற்பெயர்
லினம் உசிட்டேட்டிசிமம்
Linum usitatissimum

லின்னேயஸ்.
ஆளி விதை
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 530 kcal   2230 kJ
மாப்பொருள்     28.88 g
- சர்க்கரை  1.55 g
- நார்ப்பொருள்  27.3 g  
கொழுப்பு 42.16 g
புரதம் 18.29 g
தயமின்  1.644 mg   126%
ரிபோஃபிளாவின்  0.161 mg   11%
நியாசின்  3.08 mg   21%
பான்டோதெனிக் அமிலம்  0.985 mg  20%
உயிர்ச்சத்து பி6  0.473 mg 36%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  0 μg  0%
உயிர்ச்சத்து சி  0.6 mg 1%
கால்சியம்  255 mg 26%
இரும்பு  5.73 mg 46%
மக்னீசியம்  392 mg 106% 
பாசுபரசு  642 mg 92%
பொட்டாசியம்  813 mg   17%
துத்தநாகம்  4.34 mg 43%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

ஆளி (Flax), Linum என்ற இனத்தில் Linaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பயிர்.

ஆளிச் செடியின் விவரங்கள்[தொகு]

நிமிர்ந்து நேராக வளரும் 120 செமீ உயரத் தண்டு, மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும் 3மிமீ அகலமுள்ள நீலப் பச்சை நிற இலைகள், 5 நீல நிற இதழ்களாலான மலர், உருண்டையான வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய்.

ஆளிச் செடியின் நார், சணல் என்று தமிழில் வழங்கப்படுகின்றது.

ஆளிச்செடியின் நீல நிறப் பூ

பயன்பாடுகள்[தொகு]

விதைக்காகவும் நாருக்காவும் ஆளி வளர்க்கப்படுகின்றது. செடியின் பல்வேறு பகுதிகள் நார், சாயம், மருந்துகள், மீன்வலை மற்றும் சவர்க்காரம் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பூங்காக்களில் ஒரு அலங்காரச் செடியாகவும் கருதப்படும் ஆளியின் முழு நீல நிறம் அதன் தனித்தன்மை; ஒரு சில பூக்களே முழு நீல நிறம் உடையன; பெரும்பாலான நீல நிறப் பூக்களில் கருஞ்சிவப்பு இழையோடும்.

ஆளி விதை[தொகு]

ஆளி விதை ஈட்டும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக வண்ணச் சாயங்களில் மெருகெண்ணெய்களிலும் (varnish) உலரவைக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. விதைகளை உணவாகவும், விதைகளிலிருந்து குளிர்நிலையில் ஆட்டி எடுக்கப்பட்ட சணலெண்ணெய் (Linseed Oil) உணவுப் பொருள்களில் சேர்த்துகொள்ளலாம்.

இருவகை ஆளி விதைகள் உள்ளன; ஒன்று, மஞ்சள் மற்றொன்று காவி நிறம். காவி. ஆளி ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வந்தாலும் அது சாயம், கால்நடை தீவனம் மற்றும் சாயத்தில், ஓர் உள்ளடங்கு பொருளாகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒத்த ஊட்டச் சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகவும் திகழ்கின்றன. இதற்கு விதிவிலக்கு, சாலின்(solin) என்று அழைக்கப்படும் மஞ்சள் ஆளி; இதில் ஒமெகா-3 குறைவு, முற்றிலும் வேறுபட்ட எண்ணெயின் உயிரியல் கட்டமைப்பு உருவரை படிமம் (organic structural profile) கொண்டது.

ஆளி விதை (Flax seed)

மீன் உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் ஒமேகா-3 கொழுப்புச் சத்தைப் பெறுவதற்கு ஆளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையின் மாவுடன் 3 தேக்கரண்டி நீர் சேர்த்தால், அது கேக் மற்றும் ரொட்டி சுடுவதற்கு, முட்டைக்கு பதிலான இறுகு பொருளாகும். ஆளிவிதையின் எண்ணெய், பால் சுரப்பதைக் கூட்டும் பொருளாகப் பரிந்துரைக்கப்படுகின்றது (galactagogue).

இதய நோய்க்கு காரணமான கொலஸ்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதோடு இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் பேண ஒமேகா-3 உதவுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆளி_(செடி)&oldid=1627398" இருந்து மீள்விக்கப்பட்டது