பேச்சு:ஆளி (செடி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இச்சொல்லை இப்பொழுது தான் நான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். இது புதிதாக ஆக்கப்பட்ட சொல்லா அல்லது முன்பிருந்தே வழங்கப்பட்டு வரும் சொல்லா?--சிவகுமார் \பேச்சு 17:39, 31 மே 2008 (UTC)[பதிலளி]

ஆளி: "Linseed plant, s. sh., Linum usitatissimum; செடி வகை." என்று சென்னை பல்கலை அகரமுதலி தெரிவிக்கின்றது. பார்க்கவும் --செல்வா 19:00, 31 மே 2008 (UTC)[பதிலளி]
இணைப்பிற்கு நன்றி செல்வா. எங்கள் ஊர்ப்பக்கம் நான் இச்சொல்லைக் கேட்டதில்லை. மற்ற பயனர்களின் ஊர்களில் பயன்படுத்தப்படுகிறதா என அறிய ஆவல்.--சிவகுமார் \பேச்சு 02:07, 1 ஜூன் 2008 (UTC)
சிவகுமார், இக்கட்டுரையை முதன்முதலில் இட்ட முனைவர் கதிரவன் கொங்கு நாட்டுக்காரர்தான்! --செல்வா 02:25, 1 ஜூன் 2008 (UTC)

ஆளி என்பதற்கு "switch" என்றும் பொருள் உள்ளது.--Kanags \பேச்சு 02:32, 1 ஜூன் 2008 (UTC)

அப்படியா? எப்படி இப்பொருள் வந்தது என்றோ, எங்கு இப்படி ஆள்கிறார்கள் என்றோ சற்று விளக்கிக் கூறமுடியுமா? ஆளி என்பது எப்படி switch என்னும் பொருள் தரும் என்று எனக்கு விளங்கவில்லை. நன்றி.--செல்வா 03:17, 1 ஜூன் 2008 (UTC)
எப்படி எங்கிருந்து வந்தது என்று மட்டும் கேட்காதீர்கள்:). இலங்கையில் பௌதிக, பொறியியல் பாடநூல்களில் பயன்பாட்டில் உண்டு. நாமும் அப்படியே படித்தோம்.--Kanags \பேச்சு 03:59, 1 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆளி_(செடி)&oldid=774355" இலிருந்து மீள்விக்கப்பட்டது