வெடியா உலர்கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெடியா உலர்கனி என்பதனை தாவரவியல் வகைப்பாட்டியல்படி, அக்கீன் (Achene) என்பர். கிரேக்கச் சொல்லான ἀ என்பதும், χαίνειν என்பதும் இணைந்து, அக்கீன் என்ற சொல் உருவாக்கப் பட்டது. அதாவது இயல்பு நீங்கப்பெற்ற பிளப்பு[1] என்று பொருளாகிறது. ஆங்கிலத்தில் அக்கீன், அக்கீனியம் (achenium), அக்கினோகார்ப்பு (achenocarp) என்ற வேறுபெயர்களைக் கொண்டும் குறிப்பிடுவர். பெரும்பாலான பூக்கும் தாவரங்களில், இவ்வகை வெடியா உலர்கனி அமைந்துள்ளது.

இயல்புகள்[தொகு]

ஒரு தாவரத்தின் விதைகள் வெளிவருவதற்கு முன், இம்முறையில் தான் வெடிக்கும் என்ற வரைமுறை ஏதுமில்லை. நடைமுறையில் மிக எளிமையாக விதை என்று கூறுகிறோம். ஆனால், அவற்றில் பலவகைகள் உண்டு. அவை கீழ்கண்ட பல்வேறு முறைகளில், இவ் வெடியா உலர்கனி (Achene) பல இடங்களுக்குப் பரவுகின்றன.

  • சூரியகாந்திக் கனியில் இருப்பது போன்று, 'மழ,மழப்பாக' இருக்கலாம்.
  • இதில் மூக்குத்திப் பூண்டுமுதலியவற்றில் இருப்பது போல, காற்றில் பறந்து செல்வதற்கு உதவும், 'குடை'போன்ற பகுதி இருக்கலாம். இதற்கு மயிர்க்குச்சம்(pappus) என்று பெயர்.
  • சில விதைகளில், தகடு போன்ற மெல்லிய பாகங்கள், இறக்கை போல நீட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருகக்கும் கனி சமாரா (samara) எனப்படும்.
  • சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை விலங்குகளின் காலில், தோலில், முடியில் குத்திக் கொள்ளும்.
  • எருக்கஞ்செடியில் இருப்பது போன்று பஞ்சு போன்ற வெண்ணிற நிற மயிர்களுடன் காற்றில் பரவும் வண்ணம் இருக்கலாம்.
  • ரோஜாப்பூ செடியானது, தனது வாழ்வில் தனது இனப்பெருக்கத்தின் இறுதிக்கட்டமாக, ரோசாப்பழங்களை(Rose hip) உருவாக்குகிறது. அப்பழங்களும், இந்த வெடியா உலர்கனி வகையைச் சார்ந்த தாகும்.

ஊடகங்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடியா_உலர்கனி&oldid=1976205" இருந்து மீள்விக்கப்பட்டது