விளிம்பிப்பழம்
Appearance
விளிம்பிப்பழம், தமரத்தம் அல்லது தம்பரத்தம் (Carambola, starfruit) என்பது விளிம்பி மரத்தின் பழமாகும். இவ்வினம் பிலிப்பீன்சு, இந்தோனேசியா, மலேசியா, இந்திய, இலங்கை ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது. இது தென்னாசியா, தென் பசிபிக் மற்றும் கிழக்காசியாவின் பகுதிகளில் பிரபல்யம் பெற்ற பழமாகும். இதன் மரங்கள் சுதேசியமற்ற தென் அமெரிக்கா, கரீபியன், தென் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.
இப்பழத்தின் ஓரங்களில் தனிச்சிறப்பான முகடுகளைக் கொண்டு (பொதுவாக ஐந்து அல்லது பல) காணப்படும் இதன் குறுக்குவெட்டு விண்மீன் தோற்றத்தைப் போன்று காணப்படுகின்றது. இதனால் இதன் பெயர் விண்மீன் பழம் என்ற அர்த்தமுடைய ஆங்கிலப் பெயரால் (starfruit) அழைக்கப்படுகின்றது. இதுவும் விளி மரமும் அவிரோகா இனத்தைச் சேர்ந்த புளிப்பு வகை (ஒக்சாலிடேசியே) குடும்பத்தைச் சேர்ந்தவை.[1]
இதையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Star fruit (carambola) nutrition facts". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)