உள்ளடக்கத்துக்குச் செல்

டிராகன் பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராகன் பழத்தின் குறுக்கு வெட்டு
தைவானின் ஒரு பழக்கடையில் வாழைப்பழம் மற்றும் சீதாப்பழங்களுக்கு இடையில்

டிராகன் பழம் (pitaya /p[invalid input: 'ɨ']ˈt.ə/ அல்லது pitahaya /ˌpɪtəˈh.ə/ என்பது கள்ளி இனத்தாவரத்தில் விளையும் ஒரு பழம் ஆகும்.

தாய் மொழிப் பெயர்கள்

[தொகு]

இந்தப் பழம் பொதுவாக ஆங்கிலத்தில் டிராகன் புரூட் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் ஆசிய மொழிகளில் இதை அழைப்பதில் இருந்து வந்தது. இது இந்தோனேசிய மொழியில் buah naga (இலக்கியத்தில். டிராகன் பழம்), கெமர் மொழியில் sror kaa neak (டிராகன் அளவு), தாய்லாந்து மொழியில் kaeo mangkon (தாய்தாய் மொழி: แก้วมังกร) (டிராகன் படிகம்), லாவோ maak manggohn (லாவோலாவோ: ຫມາກມັງກອນ), வியட்நாம் மொழியில் thanh long (பச்சை டிராகன்), சீன மொழியில் huǒ lóng guǒ (நெருப்பு டிராகன் பழம்) அல்லது lóng zhū guǒ (டிராகன் முத்துப் பழம்).

நிலவியல்

[தொகு]
மெக்சிகோ நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகா கலிபோர்னியா மூவலந்தீவைச் சேர்ந்த நாட்டுப்புற நடன ஆடை இதன் பெயர் டிராகன் பழப் பூ (Flor de Pitahaya)

இது மெக்சிகோவைச். சேர்ந்ததாகக் கருதப்படுகிறது அங்கிருந்து நடு அமெரிக்காவுக்குப் பரவி பின் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இவை கிழக்கு ஆசியா, தெகாசியா, தென் கிழக்காசிய நாடுகளான கம்போடியா, தாயாலாந்து, சீனா, மலேசியா, வியட்நாம், இலங்கை, பிலிபீன்சு, இந்தோனேசியா, அண்மைக்காலமாக வங்கதேசம், மேலும் இவை ஓக்கினாவா மாகாணம், ஐக்கிய மாகாணம், இசுரேல், வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு சீனா, சைப்பிரசு, கேனரி தீவுகள் ஆகிய பகுதிகளில் விளைகின்றன.

இந்தப்பழத்தை உலகம் முழுக்கப் பரப்பியவர்கள் ஐரோப்பியர்களே.[1] தைவானுக்கு இந்தப்பழத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஒல்லாந்தர்கள்.[2] இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை “இரவு ராணி” என்று அழைப்பர். வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இந்தப் பழத்தை மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழத்தின் மையத்தில், இனிப்பான கொழகொழப்பான சதையும் அதில் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை ஒரு அலங்காரச் செடியாகவும் தோட்டங்களில் வளர்ப்பர். இது கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.

Stenocereus queretaroensis pitaya prepared for eating

டிராகன் பழ வகைகள்

[தொகு]
டிராகன் பழச்சாறை விற்கும் தாய்லாந்தில் ஒரு பழக்கடை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pitaya, Dragon Fruit". TopTropicals.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகன்_பழம்&oldid=3556653" இலிருந்து மீள்விக்கப்பட்டது