உள்ளடக்கத்துக்குச் செல்

வாழைப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்கு வகை வாழைப்பழங்கள்

வாழைப்பழம் (banana) என்பது தாவரவியலில் சதைப் பற்றுள்ள கனியும்,[1][2] வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமுமாகும்.[3] மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. எந்தக் காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது. சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், இவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும். மிருதுவான சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ,பலவிதமான வாழைபழங்கள் பெயரிடப்படுகின்றன.. அதிலும் கடுக்கரை நேந்திரம் பழம் (ஏத்தன்பழம்) உலக தரம் வாய்ந்தது,மட்டிபழம் குமரி மாவட்ட்த்தில் மட்டுமே விளையும் சத்துமிகுந்த பழம்..

வரலாறு

[தொகு]

வாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றியது பின்னர் . மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவிற்கு போனது. கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.. அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். முற்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எனவே இப்பழத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

சொற்பிறப்பு

[தொகு]

வாழைப்பழம் என்ற சொல் மேற்கு ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது, இது வாழைப்பழத்தின் "வோலோஃப்" வார்த்தையிலிருந்து இருக்கலாம், மேலும் இது ஸ்பானிஷ் அல்லது போர்த்துகீசியம் வழியாக ஆங்கிலத்திற்கு அனுப்பப்பட்டது.

வகைப்பாடு

[தொகு]

மூசா இனத்தை 1753 இல் கார்ல் லின்னேயஸ் உருவாக்கியுள்ளார். அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் மருத்துவர் அன்டோனியஸ் மூசாவிடமிருந்து இந்த பெயர் பெறப்பட்டிருக்கலாம் அல்லது வாழைப்பழம், ம uz ஸ் என்ற அரபு வார்த்தையை லின்னேயஸ் தழுவியிருக்கலாம். லத்தீன் மொழிச் சேர்க்கை காரணமாக பழைய உயிரியல் பெயர் மூசா சேபியண்டம் மூசஸ் என பெயர் பெற்றிருக்கலாம்.

வாழைப்பழங்களின் வேறுபாடு

[தொகு]

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில், விற்பனைக்கு வழங்கப்படும் 'மூசா' பழங்களை அவை உணவாகப் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில். "வாழைப்பழங்கள்" மற்றும் "வாழைப்பழம்" எனப் பிரிக்கலாம். வாழை தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிக்விடா என்ற அமெரிக்க நிறுவனம் அமெரிக்க சந்தைக்கு "ஒரு வாழைப்பழம் ஒரு வாழை அல்ல" என்று விளம்பரத்தில் கூறுகிறது. வேறுபாடுகள் என்னவென்றால், வாழைப்பழங்கள் அதிக மாவுச்சத்து மற்றும் குறைந்த இனிப்பு கொண்டவை; அவை பச்சையாக இல்லாமல் சமைக்கப்படுகின்றன; அவை அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளன, அவை பச்சை, மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக இருக்கலாம்; அவை பழுத்தவுடன் எந்த கட்டத்திலும் பயன்படுத்தப்படலாம்.

முதன்முதலில் இரண்டு "இனங்கள்" "மூசா" என்று பெயரிடும் போது வாழைப்பழங்களுக்கும் வாழைக்கும் இடையில் லின்னேயஸ் வேறுபாட்டைக் காட்டினார். மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உணவு போன்று பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வாழை சாகுபடியின் "வாழைப்பழ துணைக்குழு" உறுப்பினர்கள் சிக்விட்டாவின் நீண்ட கூர்மையான பழங்களைக் கொண்டுள்ளதென்ற விளக்கத்துடன் ஒத்திருக்கிறார்கள்.[4] அவற்றை ப்ளோட்ஸ் மற்றும் பலர் விவரித்தனர். உண்மையான வாழைப்பழங்கள், மற்ற சமையல் வாழைப்பழங்களிலிருந்து வேறுபடுகின்றன.[5] கிழக்கு ஆப்பிரிக்காவின் சமையல் வாழைப்பழங்கள் கிழக்கு ஆப்பிரிக்க ஹைலேண்ட் வாழைப்பழங்கள் ஆகிய இரண்டும் வேறு குழுவைச் சேர்ந்தவை,[6]

கேவென்டிஷ் வாழைப்பழங்கள் மிகவும் அதிமாக விற்கப்படும் பொதுவான இனிப்பு வாழைப்பழங்கள்

ஒரு மாற்று அணுகுமுறை வாழைப்பழத்தை இனிப்பு வாழைப்பழங்கள் மற்றும் சமையல் வாழைப்பழங்களாக பிரிக்கிறது வாழைப்பழங்கள் சமையல் வாழைப்பழத்தின் துணைக்குழுக்களில் ஒன்றாகும்.[7]. கொலம்பியாவில் உள்ள சிறு விவசாயிகள் பெரிய வணிகத் தோட்டங்களை விட பரந்த அளவிலான சாகுபடியை மேற்கொள்கிறார்கள். இந்த சாகுபடிகளின் ஆய்வில், அவற்றின் குணாதிசயங்களின் அடிப்படையில் குறைந்தது மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது: இனிப்பு வாழைப்பழங்கள், வாழைப்பழம் அல்லாத சமையல் வாழைப்பழங்கள் மற்றும் வாழை.

பல வாழைப்பழங்கள் உணவாகவும் மற்றும் சமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பச்சையாக சாப்பிடுவதை விட சிறியதாக இருக்கும் மாவுச்சத்து சமையல் வாழைப்பழங்கள் உள்ளன. இவற்றில் வண்ணங்கள், அளவுகள் மற்றும் வடிவங்களின் வரம்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் வளர்ந்த அல்லது விற்கப்பட்டதை விட மிகவும் வேறுபாடு காணப்படுகின்றது.[4]

சுருக்கமாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள வர்த்தகத்தில் (சிறிய அளவிலான சாகுபடியில் இல்லை என்றாலும்), பச்சையாக உண்ணப்படும் "வாழைப்பழங்கள்" மற்றும் சமைக்கப்படும் "வாழைப்பழங்கள்" ஆகியவற்றை வேறுபடுத்துவது சாத்தியமாகும். உலகின் பிற பிராந்தியங்களில், குறிப்பாக இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில், இன்னும் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளன. வாழைப்பழங்கள் பல வகையான சமையல் வாழைப்பழங்களில் ஒன்றாகும், அவை எப்போதும் இனிப்பு வாழைப்பழங்களிலிருந்து வேறுபடுவதில்லை.

வாழைப்பழ வகைகள்

[தொகு]

பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன.

பேயன்

[தொகு]
  • தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்
  • அதிக சூடான உடம்பைப் பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது
  • உடல் நலத்திற்கு நல்லது
  • மலச்சிக்கலை நீக்கும்
  • உடலில் அதிகக் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையைக் கட்ட வைத்து நுரையீரலைக் கெடுத்துவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.

ரஸ்தாளி

[தொகு]
  • உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.
  • இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.
  • பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.
  • பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
  • ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
  • அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.
  • வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
  • வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மோரிஸ்(பச்சை/மஞ்சள்)

[தொகு]
  • மோரிஸ் பழத்தில் பச்சை மஞ்சள் என்று இரண்டு வகை உண்டு.
  • எனவே இதனை பச்சை அல்லது மஞ்சள் வாழைப்பழம் என்று பொதுவாக நிறத்தை வைத்து கூறுவதுண்டு.
  • பச்சை மோரிஸ் பழத்தை பச்சை நாடன் என்று தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.(பச்சை நாடன் பழத்தைப்பற்றி கீழே பார்க்கவும்)
  • இது மரபணு மாற்று முறையில் உருவாக்கப்பட்டது
  • குறைந்த அளவே இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
  • காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
  • மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
  • பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பச்சை நாடன்

[தொகு]
  • பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
  • தடிமனான தோல் கொண்டது.
  • நார்ச்சத்து மிகுந்தது
  • உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது
  • குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை நாடன் பழத்திற்கு உண்டு
  • அம்மை நோய் தாக்கியவர்களுக்கு இதனை அதிகம் கொடுக்கலாம்
  • காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது
  • மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது
  • பச்சை மோரிஸ் பழத்தினை பச்சை நாடன் என்று தவறாக கருதக்கூடிய வாய்ப்பு உள்ளது
  • பச்சை மோரிஸ் பழத்தை ஒப்பிடும்போது இது நீளம் குறைவாகவும், தோல் தடிமன் அதிகமாகவும், பழம் அதிகம் வளையாமலும், இனிப்பு சற்றே குறைவாகவும் இருக்கும்
  • நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய்ச் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)

மலை

[தொகு]
  • சற்று விலை அதிகமான பழம்.
  • வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.
  • நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.
  • இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.
  • சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
  • இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
  • தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
  • பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.
  • நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
  • அஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.

பூவன்

[தொகு]
  • இப்பழம் நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.
  • தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.
  • மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
  • ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
  • அஜீரணக் கோளாறால் சிரமப்படுபவர்கள் தினமும் அதிகப்படியாக உணவு உண்பதை தவிர்த்து விட்டு தினமும் ஒரு வேளை மட்டுமே இப்பழத்தை இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

கற்பூரம்

[தொகு]
  • இதற்கு கற்பூறவள்ளி, தேன் வாழைப்பழம் என்றும் பெயர் உண்டு
  • சிறிய அளவில் இருக்கும்
  • இனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.
  • தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது
  • தலைபாரம் நீங்கப் பயன்படும்.
  • சாம்பல் கலந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • தோல் கருத்த பின்பும் பழம் உண்ண உகந்தது
  • பழம் நடுவில் விதைகள் சற்று அதிகம் உள்ளது

மொந்தன்

[தொகு]
  • இப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார்.
  • சமையலுக்கு உபயோகப்படுத்தும் வாழைக்காயைப் பழுக்க வைத்த பின் எடுக்கும் பழத்தைத்தான் மொந்தன் பழம் என்ற கூறுவார்கள்.
  • கனிந்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
  • மிதமாக அளவாகத்தான் இப்பழத்தை சாப்பிட வேண்டும்.
  • ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று உள்ளே தள்ளினால் பசியை மந்தப்படுத்தும்.
  • அளவாக தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.
  • வாந்தியை நிறுத்தும்.
  • காமாலை வியாதியை சுகப்படுத்தும் குணம் உண்டு.

நேந்திர

[தொகு]

குமரி மாவட்டத்தில் அபரிமிதமாக விளையும் பழம் இது. கேரளா ,கோவையிலும் விளைவிக்கிறார்கள். குமரி நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.

  • மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம்.
  • நல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும்.
  • உடம்புக்கு குளிர்ச்சியை தருவது.
  • இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும்
  • வற்றல், சிப்ஸ், ஜாம் செய்து விற்கிறார்கள்.
  • உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.அடுப்பை மூட்டி இட்லி பானையை வைத்து இட்லி தட்டில். இட்லிவேக வைப்பதுபோல அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து. 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் சாண்டோ வாக திகழ்வார்கள்.
  • நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். இதனால் தான் கேரளியர் படிப்பில் சிறந்து விளங்குகிறார்களோ?
  • சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும்.

நவரை

[தொகு]
  • மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது
  • அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவாதது.
  • சொறி, சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிட்டால் புண் அதிகமாகும்.
  • வாத நோய்க்காரர்களுக்க ஆகவே ஆகாது.
  • பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
  • நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கம். அதாவது மந்தமாகவே இருக்கும்.

அடுக்கு

[தொகு]
  • நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.
  • இந்தப்பழத்திற்குள்ள நல்ல குணம், எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதியம் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடபமல் இருப்பது நல்லது.

கருவாழை

[தொகு]
  • அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்
  • மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம்
  • வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது
  • உடலுக்கு ஊட்டத்தைத் தருதம் நல்ல பழம் இது.
  • குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.

வெள்ளை

[தொகு]

இப்பழம் மிகுந்த சுவையுள்ளதாக இருக்கும்[8]

ஏலரிசி

[தொகு]

ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

சிங்கன்

[தொகு]

இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.

செவ்வாழை

[தொகு]
  • வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்
  • சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது
  • குமரி மாவட்டத்தில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
  • சற்று விலை அதிகமானது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.
  • செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.

.*பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.

  • இருதயம் பலப்படும்
  • பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.
  • பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

மட்டிப்பழம்

[தொகு]
  • மட்டி வாழை ரகத்தை தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் அதிகமாக பயிர் செய்கிறார்கள்.
  • மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. தார்களில் பழங்கள் நெருக்கமாக இருக்கும்.
  • இனிப்புச் சுவையுடன் மணமாகவும் இருப்பதாலும் விதைகளே இல்லாது இருப்பதாலும் கைக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்றது.
  • இதன் வயது 11 முதல் 12 மாதங்கள்.
  • தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும்.
  • ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோ வரை எடை இருக்கும்.
  • ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும்.

வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள்

[தொகு]
  • நீர் (ஈரப்பதம்) - 66.4 கிராம்
  • நார் - 0.4 கிராம்
  • கொழுப்பு - 0.3 கிராம்
  • புரதம் - 1.2 கிராம்
  • மாவுப்பொருள் - 28.0 கிராம்
  • சக்தி (எனர்ஜி) - 114.0 கலோரி
  • பாஸ்பரஸ் - 36.0 மி;.லி
  • இரும்புச்சத்து - 0.8 மி.கி
  • சுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி
  • தையாமின் - 0.05 யு.ஜி
  • கரோட்டின் - 0.78 மி.கி
  • ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
  • நியாசின் - 0.5 மி.கி
  • வைட்டமின் ஏ - 12.0 ஐ.கியு
  • வைட்டமின் பி1 - 0.5 மி.கி
  • வைட்டமின் பி2 - 0.08 மி.கி

உசாத்துணை

[தொகு]
  1. "Banana from 'Fruits of Warm Climates' by Julia Morton". Hort.purdue.edu. Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2009-04-16.
  2. Armstrong, Wayne P. "Identification Of Major Fruit Types". Wayne's Word: An On-Line Textbook of Natural History. Archived from the original on 2011-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
  3. "Merriam-Webster Online Dictionary". பார்க்கப்பட்ட நாள் 2013-01-04. {{cite web}}: Invalid |ref=harv (help)
  4. 4.0 4.1 Valmayor et al. 2000, ப. 2.
  5. Ploetz et al. 2007, ப. 18–19.
  6. Ploetz et al. 2007, ப. 12.
  7. Office of the Gene Technology Regulator 2008, ப. 1.
  8. "வாழைப்பழத்தில் என்ன இருக்கிறது?". பார்க்கப்பட்ட நாள் 26 மே 2017.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைப்பழம்&oldid=4034256" இலிருந்து மீள்விக்கப்பட்டது