செவ்வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தக்கலை வாழைப்பழ சந்தை, கன்னியாகுமரி மாவட்டம்
செவ்வாழைச் சீப்புகள்

வாழைப்பழங்களில் செவ்வாழை(செந்த்துழுவன்) சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.

தோற்றம்[தொகு]

செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன.

1870 - 1880 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் முதன் முதலாக டொராண்டோ சந்தைகளில் இவ்வகைப்பழங்கள் விற்கப் பட்டன.[1]

பயன்கள்[தொகு]

  • இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும், நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படி, இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது.
  • கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. John V McAree (1953) The Cabbagetown Store (Toronto: Ryerson Press) p. 19.

ஊடகங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாழை&oldid=1813432" இருந்து மீள்விக்கப்பட்டது