மொட்டு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மொட்டு (bud) என்பது தாவரவியலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மொட்டானது இலைக்கோணத்திலோ அல்லது தண்டின் நுனியிலோ தோன்றும் வளர்ச்சியடையாத கருத்தண்டு (embryonic shoot) ஆகும். ஒருமுறை உருவாகிய ஒரு மொட்டு ஒரு சில நாட்களுக்கு ஒரு செயலற்ற நிலைமையில் இருந்து பின் உடனடியாக தண்டுத்தொகுதியாக வளர்ச்சியடையக்கூடும். மொட்டுகளானது சிறப்பு வளர்ச்சி பெற்று மலர்களின் உருவாக்கத்திற்கோ அல்லது பொதுவான தண்டு உருவாக்கமோ நிகழலாம். விலங்கியலில் மொட்டு என்ற சொல் விலங்கின் புறவளர்ச்சியால் உடலிலிருந்து தோன்றி புதிய தனி உயிரிகளை தோற்றுவிக்கும் அமைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மொட்டுகளின் வகைகள்[தொகு]
தாவரங்களை அடையாளம் காண்பதில் மொட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக குளிர்காலங்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் மொட்டுகள் உண்டாகும் [1]. மொட்டுகளை அது உருவாகும் இடம், நிலை, அமைப்பு, மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தி விவரிக்கப்படுகிறது.
உருவாகும் இடத்தைப் பொருத்து[தொகு]
மொட்டுகள் உருவாகும் இடத்தைப் பொருத்து மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை
- நுனி மொட்டு, தண்டின் நுனியில் உருவாகும் மொட்டு
- கோண மொட்டு, இலைக்கோணத்தில் உருவாகும் மொட்டு ஆகும்
- வேற்றிடத்து மொட்டு, வேர் அல்லது இடம் மாறி உருவாகும் மொட்டுகள்
ஒளிக்கோப்பு[தொகு]
- Buds
Alnus glutinosa bud
Tilia bud
Black buds of a European ash, Fraxinus excelsior
An opening inflorescence bud at left, that will develop like the one to its right
Inflorescence bud of a sunflower
A quince's flower bud with spirally folded petals
Opening Nelumbo flower buds
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Trelease, W. (1967) [1931], Winter botany: An Identification Guide to Native Trees and Shrubs, New York: Dover Publications, Inc, ISBN 0486218007