மலை வேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைவேம்பு மரக்கன்று
மலை வேம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Sapindales
குடும்பம்: Meliaceae
பேரினம்: Melia
இனம்: M. dubia
இருசொற் பெயரீடு
Melia dubia
Cav.
வேறு பெயர்கள்

Melia composita

மலை வேம்பு (தாவரவியல் பெயர்: Melia composita willd. மிலியேசியே(Meliaceae)க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.[1] இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது.

தாவரவியல் பண்புகள்[தொகு]

மரத்தின் பட்டை கருங்கபில நிறமானது, பெரிய நீள்சதுர செதில்களாக உதிருபவை. கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்கள் மறைந்து விடும். இலைகள் இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்) அல்லது மூன்று முறை கிளைத்த சிறகு வடிவக்கூட்டிலை , ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, முதல் 30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு 0.3-1.2 செ.மீ.; பின்னே 3-8 ஜோடிகள்; ஒர் பின்னே 2-11 சிற்றிலைகள் உடையது, எதிரடுக்கமானவை, 4.5-9 x 2-4 செ.மீ., முட்டை வடிவானது-நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், சமமற்றது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, கோரியேசியஸ், முதிரும் போது உரோமங்களற்றது; மைய நரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், சீராக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பூக்காம்பு, 12-20 செ.மீ. நீளமானது; மலர்கள் பச்சை-வெள்ளை நிறமானது. கனிகள் உள்ளோட்டுத்தசைகனி, முட்டைவடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, நீள்வாக்கில் மேடுகளுடையது, சதைப்பற்றானது, மஞ்சள் நிறமானவை; விதைகள் 1-6.

காலநிலை மற்றும் மண்[தொகு]

பசுமைமாறாக் காடுகளாகக் காணப்படும் மலை வேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது. குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

வகைகள்[தொகு]

மலைவேம்பில் 2 வகை உள்ளன. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.

வேறு மொழிப் பெயர்கள்[தொகு]

  • மலையாளப் பெயர்: அரையவேப்பு, மலவேப்பு, வல்லியவேப்பு, காட்டுவேப்பு
  • கன்னடப் பெயர்: பேட்டா பேவு, ஹப்-பேவு

காணப்படும் இடம்[தொகு]

இந்தியா, இலங்கை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cultivation of Melia dubia ( Tamil: Malai Vembu )". Agricultural Information. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_வேம்பு&oldid=3871063" இலிருந்து மீள்விக்கப்பட்டது