கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
Jump to navigation
Jump to search
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய இரண்டு புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. இப் புற்கள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை. கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லில் ஆக்சலேட்டு என்ற நச்சுப்பொருள் அதிகமாக இருப்பதால் இத்தீவனத்துடன் 5 கிலோ பயறு வகை தீவனத்தை கலந்தோ, சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கலந்தோ கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்[1]. கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்[2]. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கம்பி நேப்பியர் ஒட்டுப்புல்லை (சி.என். 4 ரகம்) கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியைப் பெருக்கலாம்[3].
வகைகள்[தொகு]
- பூசா ஜெயண்ட், என்பி 21 மற்றும் 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, 7 மற்றும் 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின ரகங்களாகும்.
- கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கே.கே.எம் 1 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரகங்களாகும்[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுபடி முறைகள்". விகாஸ்பீடியா. பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.
- ↑ 2.0 2.1 "தீவன உற்பத்தி: புல் வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 28 பெப்ரவரி 2016.
- ↑ "பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!". தினமணி. 8 சனவரி 2015. http://www.dinamani.com/agriculture/2015/01/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE/article2608498.ece. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016.