ஊத்தப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊத்தப்பம்
Uttapam cool spark.jpg
ஊத்தப்பம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி,உளுந்து கலவைமாவு
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
180 கலோரி (754 kJ)
வாரணாசித் தெருக்களில் ஊத்தப்பம்

ஊத்தப்பம் (Uttapam) (தெலுங்கு: ఉతప్పం) (கன்னடம்: ಉತ್ತಪ್ಪಾ) தோசை போன்று ஈரமாவை சுட்டு செய்யப்படும் ஓர் காலை உணவாகும். 1:3 என்ற கணக்கில் உளுந்தையும் அரிசியையும் (சிலர் இதிலும் 1:1 கணக்கில் புழுங்கல் மற்றும் பச்சரிசியைக் கலப்பர்) கலந்த கலவையை ஓரிரவு ஊறவைத்து ஈரமாவு தயாரிக்கப்படுகிறது. [1] இது மொறுமொறுப்பாக இல்லாது சற்றே தடிமனாக பான்கேக் போல தோசைக்கல்லில் நேரடியாக சுடப்படுகிறது. பொதுவாக இதன்மேலாக பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி அல்லது வெங்காயம்-மிளகாய் தூவப்படுகிறது; மற்ற வழமையான மேல்தூவல்களாக தேங்காய் துருவல், காய்களின் கலவை இருக்கின்றன. இது பொதுவாக சாம்பார், சட்னியுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஓர் வழமையான ஊத்தப்பத்தில் 180 கலோரிகள் கிடைக்கின்றன.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்தப்பம்&oldid=3476683" இருந்து மீள்விக்கப்பட்டது