கிச்சடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிச்சடி
Khichuri-edit.jpg
ஒரு தட்டில் உள்ள கிச்சடி
மாற்றுப் பெயர்கள்கிச்சடி, கிச்சரி, கிச்சுரி, கிச்டி
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
Associatedஇந்தியா, வங்காளம், பாக்கித்தான், நேபாளம்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பருப்பு, மசாலாப் பொருள்
Cookbook: கிச்சடி  Media: கிச்சடி
பெங்களூரில் கிச்சடி பிரசாதமாக ஆர்கா இலையால் செய்யப்பட்ட கிண்ணத்தில் கொடுக்கப்படுகிறது

கிச்சடி அல்லது கிச்சரி (Khichdi) என்பது அரிசி அல்லது இரவை, பலவிதமான காய்களின் துண்டுகள், பருப்பு, தானியங்கள், தயிர், பால், நெய், மசாலா பொருட்கள் முதலிய எல்லா உணவுப் பொருட்களையும் பல்வேறு வகைகளானக் கலவைகளில், குறிப்பிட்ட விகிதாச்சாரப்படிக் கலந்து சமைத்து, தேவையான தாளிதம் செய்து, இந்தியாவெங்கும் சாப்பிடப்படும் உணவுவகை ஆகும். கம்பு, பாசிப் பருப்பிலும் இவை செய்யப்படுவதுண்டு. இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் திட உணவாகவும் இது இருக்கிறது.[1] சவ்வரிசியில் செய்யப்படும் சபுதானக் கிச்சடி சிவராத்திரி, நவராத்திரி போன்ற விரத நாட்களில் இந்துகளால் உண்ணப்படுகிறது.[2][3] இது ஆங்கிலோ-இந்திய உணவான கேட்கேரியின் முன்னோடி ஆகும்.[சான்று தேவை]

சொற்பிறப்பியல்[தொகு]

"கிச்சடி" என்பது "கிச்சா" என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து தோன்றியது. இதன் பொருள் அரிசி பருப்பினால் செய்யப்படும் உணவு என்பதாகும்.[4][5]

வரலாறு[தொகு]

வங்காள முறையில் செய்யப்பட்ட, கிச்சடி
கோரை கிச்சடி

கிரேக்க தூதர் செலிக்கசு கிச்சடி என்பது அரிசி மற்றும் பருப்பினால் இந்திய துணைக்கண்டத்தில் செய்யப்படும் ஓர் உணவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.[6] மோராக்கன் பயணி இப்னு பதூதா கிச்சரியை அரிசி பாசிப் பருப்பினால் ஆன உணவு என 1350 இல் குறிப்பிடுகிறார்.[7] அஃபனாசி நிகித்தின் என்ற உருசியப் பயணியாலும் கிச்சடி 15 ஆம் நுாற்றாண்டில் குறிப்பிடப்படுகிறது. முகலாயர்களிடமும் இது மிகவும் புகழ்பெற்றது. அக்பரின் மந்திரியான அபுல் ஃபசல் எழுதிய நுாலில் ஏழு வகையான கிச்சடி குறிப்பிடப்படுகிறது.[8] கிச்சயைக் கொண்டு அக்பர், பீர்பால் கதையும் உள்ளது.[9]

பிராந்திய வேறுபாடுகள்[தொகு]

தேங்காய் கிச்சடி

கிச்சடி இந்திய துணைக்கண்டமெங்கும் புகழ் பெற்றது அல்லாமல், பாகிஸ்தான், பிஜி தீவுகள், நேபாலிலும், புகழ்பெற்றது. அரியானா, ராஜஸ்தான், குஜராத், வங்காளம், அசாம், பீகார், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு வகையாக செய்யப்படுகிறது.[10][11] பல தானியங்கள் கலந்த கிச்சடி சத்து நிறைந்தது.[12]

வங்காளம்[தொகு]

கிச்சுாி

வங்காளத்தில் இது கிச்சுரி என்று அழைக்கப்படுகிறது. இவை நெய், ஊறுகாய் சேர்த்து கறி, மீன், உருளைக் கிழங்கு, கத்திாிக்காய், ஆம்லேட்டுடன் பரிமாறப்படுகிறது.[சான்று தேவை] மழைக்காலங்களிலும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவாகவும் விளங்குகிறது.[சான்று தேவை]

இல்லத்தரசிகளும், சமையல்காரா்களும் இவற்றில் பல பொருட்கள் சோ்த்த சமைப்பர். அதனால் "ஜோக கிச்சுரி" என்றால் "உணவைக்" குறிக்கும் சொல்லாடல் உண்டானது.[சான்று தேவை]

ரமலானின் பொழுது, வங்காள தேசத்திலுள்ள சில்லெட் நகரில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் பிறநாடுகளில் வாழும் சில்லெட் மக்கள் தங்கள் நோன்பை கிச்சுரி ஆகிய நோன்பு கஞ்சியைக் குடித்து முடித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டுள்ளனர்.[சான்று தேவை]

பீகார்[தொகு]

பீகாா் மாநிலத்தில் அரிசி, பருப்பு, கரம் மாசாலா சோ்த்து அரைதிட நிலையில் சமைத்து, நெய், உருளைக் கிழங்கு கொத்சு, கத்திரிக்காய் கொத்சு, தக்காளி சட்டினி, அப்பளம், மாங்காய் ஊறுகாயுடன் பரிமாறப்படுகிறது[சான்று தேவை]. வழக்கமாக அனைத்து சனிக்கிழமைகளிலும்[சான்று தேவை] மகர சங்ராந்தியன்று இரவு உணவாகவும் சாப்பிடப்படுகிறது.[சான்று தேவை] பனிக் காலங்களில் காலிபிளவா், பச்சை பட்டாணி சேர்த்து செய்வது வழக்கம்.

குஜராத்[தொகு]

குஜராத்தில் காதி, சுர்தி உந்தியா மற்றும் கத்திரிக்காய் கொத்சுடனும் பரிமாறப்படுகிறது. சாடி கிச்சடி, மசாலா கிச்சடி, சுவாமி நாராயண் கிச்சடி என்று பல சுவைகளிலும் பரிமாறப்படுகிறது[சான்று தேவை]. பருக் மாவட்டத்தில், அரிசியுடன் மஞ்சள் சேர்த்து கிச்சடி சமைத்து, காதியுடன் மாலை உணவாக உண்ணப்படுகிறது. இது குட்சி மக்களின் பாரம்பரிய உணவாகும்.[சான்று தேவை]

குறைந்த எண்ணெயில் சமைக்கும் பொழுது, மிதமான மற்றும் சத்தான உணவாக இருப்பதால் ஆயுர்வேத மற்றும் இயற்கை உணவு உண்பவர்களுக்கு இது மிகவும் விருப்பமானது.[சான்று தேவை]

அரியானா[தொகு]

அரியானாவில் கிச்சரி என்பது தினை மற்றும் பாசிப்பருப்பை அரைத்து, சூடான நெய் அல்லது தயிருடன் கலந்து உண்ணப்படுவதாகும்.[13][14][15][16] சில நேரங்களில் சோளம், கம்பு மற்றும பாசிப்பருப்புடன் சேர்க்கப்படுகிறது.[16] தாலியா என்பது கோதுமை அல்லது வாற்கோதுமையுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இனிப்புக் கஞ்சியாகும்.[16]

ஒடிசா[தொகு]

இங்கு பிரபலமான கிச்சடி வகைகள் அடகெங்கு கிச்சடி (இஞ்சி-பெருங்காய கிச்சடி), பாசிப் பருப்பு கிச்சடி முதலியனவாகும். அடகெங்கு கிச்சடி என்பது ஜெகநாதர் கோயிலின் முக்கிய உணவாகும்.[சான்று தேவை]

தென்னிந்தியா[தொகு]

துவரம் பருப்பு கிச்சடி என்பது கர்நாடகாவில் புகழ்பெற்ற ஒருவகையான கிச்சடியாகும். அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து செய்யப்படும் பொங்கல், தென்னிந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டின் புகழ் பெற்ற உணவாகும்.

ஐதராபாத் இசுலாமியர்கள்[தொகு]

ஐதராபாத் உணவுகளில் கிச்சடி முக்கியமானது. முற்கால ஐதராபாத் மாநிலத்திலும், தற்கால தெலுங்கானா, மரத்வாடா (Marathwada), ஐதராபாத்-கர்நாடகா போன்ற இடங்களில் காலை உணவாக உண்ணப்படுவது.[17] கிச்டி, கீமா, கட்டா என்றும் அழைக்கப்படுகிறது.[18]

கிச்ரா மற்றும் கிச்சடி[தொகு]

கிச்ரா என்பது கறி சேர்த்து செய்யப்படும் உணவு, கிச்சடி சைவ உணவாகும்.[சான்று தேவை]

கிச்சடி இந்தியாவின் "தேசிய உணவு"[தொகு]

அதிகாரப்பூா்வமின்றி, இந்திய ஊடகங்களால் இந்தியாவின் "தேசிய உணவாக" கிச்சடி வழங்கப்படுகிறது.[சான்று தேவை] இந்திய அரசாங்கத்தால் "உணவுகளின் அரசி" என்று உலகமெங்கும் பிரபலப்படுத்தப்படுகிறது.[சான்று தேவை] உணவு பதனிடும் தொழிற்சாலை அமைச்சகத்தின் அமைச்சா் அர்சிம்ரத் கவுர் பாதல் "கிச்சடி மிகுவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு. ஏழை, பணக்காரர் என்று அனைவராலும் உண்ணப்படுவது. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைைய காட்டும் சின்னமாகத் திகழ்கிறது. எனவே, கிச்சடி இந்திய உணவுகளின் அடையாளமாகத் தோ்ந்தெடுக்கப்படுகிறது" என்றார். இதன் மூலம், இந்திய உணவுகளை உலகமெங்கும் பிரபலப்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது.[19][20]

கலாசாரத்தில்[தொகு]

பலவற்றின் கலவை அல்லது கதம்பம் என்ற பொருளில் திரைப்படங்களில், எடுத்துக்காட்டாக, "கிச்டி: தி மூவி" (Khichdi: The Movie), மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், எடுத்துக்காட்டாக, கிச்டி (Khichdi (franchise)), கிச்டி (தொடா்), இன்ஸ்டன்ட் கிச்டி போன்று பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Hetal of MasterChef U.S. season 6
 2. Sean Williams, 2015, "The Ethnomusicologists' Cookbook, Volume II: Complete Meals from around the world", Routledge Taylor & Francis group, page 37.
 3. Uma Aggarwal, 2009, "The Exquisite World of Indian Cuisine, Allied Publications, page 106.
 4. Monier-Williams, Monier (1995). A Sanskrit-English Dictionary. Delhi: Motilal Banarsidass. p. 339. ISBN 81-208-0065-6. Retrieved 2010-06-29
 5. R. S. McGregor, ed. (1997). The Oxford Hindi-English Dictionary. Oxford University Press. p. 237. ISBN 978-0-19-864339-5.
 6. "Khichdi–A Comfort Food – India Currents". Retrieved 1 January 2015
 7. "Rehla of Ibn Battuta". Retrieved 21 March 2015
 8. Recipes for Dishes Ain-i-Akbari, by Abu'l-Fazl ibn Mubarak. English tr. by Heinrich Blochmann and Colonel Henry Sullivan Jarrett, 1873–1907. The Asiatic Society of Bengal, Calcutta, Volume I, Chapter 24, page 59. "3. K'hichri. Rice, split dal, and ghee 5 s. of each; ⅓ s. salt: this gives seven dishes
 9. "Cooking The Khichdi is one of Birbal Stories". Retrieved 1 January 2015
 10. Chatterjee, Priyadarshini (2017-02-10). "From Kashmir to Karnataka, khichdi is the one true underestimated food of India". Scroll.in. Retrieved 2017-02-10.
 11. Melissa King. T op 67 Quick and Easy North Indian Vegetarian Cookbook.
 12. Vaibhav Mahajan. "Multigrain Khichdi". Livingfoodz.com
 13. 1990, "Haryana District Gazetteers: Sonipat", Government of Haryana publication, Page 83.
 14. 1912, "Haryana District Gazetteers: Delhi district gazetteer", Government of IndiaGazetteers Organisation, Page 90
 15. 1987, "Haryana District Gazetteers: Hisar", Government of Haryana publication, Page 65.
 16. 16.0 16.1 16.2 Charmaine O' Brien, 2013, "T he Penguin Food Guide to India", Penguin BooksPenguin Books.
 17. "Hyderabadi Brunch: Khichdi Khatta Kheema". talkistania. 2013-02-15. Retrieved 2016-08-22
 18. "My Kitchen's Aroma: Khichdi Keema Khatta". mykitchenaroma.blogspot.ca. Retrieved 2016-08-22
 19. Government to designate 'khichdi' as national dish", Business Standard, 1 November 2017
 20. "'Fictitious' Says Union Minister Harsimrat Kaur Badal. Khichdi Won't be the National Dish", NDTV, 1 November 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சடி&oldid=2701179" இருந்து மீள்விக்கப்பட்டது