பச்சடி (ராய்தா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பச்சடி
Raita with cucumber and mint.jpg
வெள்ளரி மற்றும் புதினா பச்சடி
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்தியத் துணைக்கண்டம் பிராந்திய வேறுபாடுகளுடன்
Associatedஇந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானி நேபாளம்
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்ந்த
முக்கிய சேர்பொருட்கள்தயிர் (யோகர்ட்), மோர், வெள்ளரி, புதினா
வேறுபாடுகள்தயிர் சட்னி, பச்சடி
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
46 kcal (193 kJ)
Cookbook: பச்சடி  Media: பச்சடி

பச்சடிஅல்லது ராய்தா (Raita) என்பது இந்திய துணை கண்டத்தில் வழங்கி வரும் பொதுவான ஒரு உணவின் பெயராகும். இது தயிருடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பச்சடியில், பச்சைக் காய்கறிகள் அல்லது சமைத்த காய்கறிகள், மற்றும் பழங்கள் சேர்ப்பதுண்டு. தயிருடன் காரா பூந்தி சேர்த்து செய்யும் உணவிற்கு பூந்தி பச்சடி என்பது பெயராகும். காரா பூந்தி என்னும் தின்பண்டம் கடலைமாவு உபயோகித்து தயாரிக்கப்படுகிறது.

மேற்கத்திய உணவு வகைகளில், பச்சடி என்பது ஒரு பக்க உணவாக இருக்கிறது. இது டிஷ் அல்லது டிப், அல்லது சமைத்த சாலட் எனப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் உணவை ருசிக்கச் செய்யும் ஒரு பொருளாக குறிப்பிடப்படுகிறது. உப்பு, மிளகு, கடுகு, கொத்தமல்லி போன்ற பாரம்பரியமான மசாலா கலவையைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். அதற்கு ஈடு கொடுக்க, தயிருடன் கலந்து தயாரிக்கப்படும் இந்த வகை உணவு, சாப்பிடுபவருக்கு குளிர்ந்த தன்மையைக் கொடுக்கும். சில ஆசிய இந்திய உணவு வகைகளில், குறிப்பாக ரொட்டிக்கு பக்க உணவாக பச்சடி, சட்னி மற்றும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது.

தயிரில் கொத்தமல்லி, சீரகம் வெங்காயம், புதினா, மிளகுத்தூள் , சாட் மசாலா மற்றும் பிற மூலிகைகள் சேர்க்கப்படுகிறது.

சொற்பிறப்பு[தொகு]

ராய்தா என்ற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் அச்சிடப்பட்டிருந்தது; இது இந்தி மொழியில் இருந்து வருகிறது.[1] பெங்காலி மொழியிலும், ஹிந்துஸ்தானியிலும் ராய்தா என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையான ரஜிகா என்ற சொல்லிலிருந்து வந்தது. இதற்கு, கருப்பு கடுகு அல்லது கடுமையான பொருள் என்ற அர்த்தம் கொண்டது.[2] தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில், ராய்தா பச்சடி எனப்படுகிறது .

குறிப்பாக தென் ஆப்பிரிக்க இந்திய உணவு வகைகளில், ராய்தா சில நேரங்களில் வெறுமனே தஹி என்று அழைக்கப்படுகிறது. அல்லது அதன் முக்கிய மூலப்பொருளுக்கு பின்னர், "சோர்மில்க்" என அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புலாவுடன் பூந்தி பச்சடி பரிமாறப்படுகிறது

துண்டு துண்டாக வெட்டிய காய்கறி அல்லது பழங்கள் ( வெள்ளரி , வெங்காயம், கேரட், தக்காளி பைனாப்பிள், பப்பாளி போன்றவை ) கலவையுடன், சீரகம் ( ஜீரா ) மற்றும் பொரித்த கருப்பு கடுகு சேர்க்கப்படுகிறது. பின்னர் தயிருடன் கலக்கப்படுகிறது.[3]

பச்சையான இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மற்றும் சில நேரங்களில் கடுகு பேஸ்ட் சுவையை வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன.   [ சான்று தேவை ] இந்தியாவின் பல பகுதிகளில், பல வகையான பச்சடிகள் தயாரிக்கப்படுகின்றன. மிகவும் குறிப்பிடத்தக்கதாக பூந்தி பச்சடி உள்ளது. மற்றும் வெங்காய பச்சடி, காய்கறி பச்சடி ஆகியவை பொதுவாக குளிர்ந்த நிலையில் பரிமாறப்படுகிறது. காரமான இந்திய உணவுகளை சாப்பிடும் போது பச்சடி என்கிற ராய்தா மிகச் சிறந்த பக்க உணவாக கருதப்படுகிறது.[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சடி_(ராய்தா)&oldid=2845822" இருந்து மீள்விக்கப்பட்டது