சீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீரகம்
Cuminum cyminum - Köhler–s Medizinal-Pflanzen-198.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: Apiaceae
பேரினம்: சீரகி
இனம்: C. cyminum
இருசொற் பெயரீடு
Cuminum cyminum
லி.[1]
காய்ந்த சீரக விதைகள்

சீரகம், அசை அல்லது நற்சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.

சீர்+அகம்=சீரகம்[தொகு]

சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.

கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது[தொகு]

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர் பாடல்[தொகு]

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே

என சித்தர் பாடல் ஒலிக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cuminum cyminum information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 2008-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரகம்&oldid=1598716" இருந்து மீள்விக்கப்பட்டது