காளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
The Panther cap (Amanita pantherina இது ஒரு நச்சுக்காளான் வகை ஆகும்)

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

நச்சுக்காளான்களை இனங்காணல்[தொகு]

முதன்மை கட்டுரை: காளான் நஞ்சாதல்
காளான்.JPG

சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,

காளான் வகைகள்[தொகு]

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக்காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும். 2000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவு காணப்படுகிறது. உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன. [1]

காளான்களுக்கான சத்துக்கள்[தொகு]

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன. எனவே, இவை ஊணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் காளான் ஒட்டுண்ணியாகவும் சாருண்ணியாகவும் உள்ளது. மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும். இவற்றை அழிக்க " காளான் கொல்லி" என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது

காளான்களின் இனப்பெருக்கம்[தொகு]

மரப்பட்டையில் வளர்ந்திருக்கும் காளான்

காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.

காளான்களின் பயன்கள்[தொகு]

  • மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
  • உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
  • பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
  • மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன.
  • ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.

உண்ணத்தக்க காளான்கள்[தொகு]

காளான்கள் சீனா, கொரியா, ஐரோப்பா, சப்பான் என பல்வேறு நாடுகளில் சமையல் கலைகளிலும் சிறப்பான சமையல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகளின் சமையல் உலகில் காளான்கள் இறைச்சியாகவே கொள்ளப்படுகின்றது. மீச்சந்தைகளில் விற்கப்படுகின்ற பெருமளவிலான காளான் வகைகள் வர்த்தக ரீதியல் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை.

மேற்கோள்[தொகு]

  1. இளையர் அறிவியல் களஞ்சியம். மணவை பப்ளிகேஷன். 1995
  2. http://botit.botany.wisc.edu/toms_fungi/apr2002.html
  3. http://www.abc.net.au/science/news/enviro/EnviroRepublish_828525.htm
    "https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்&oldid=2496218" இருந்து மீள்விக்கப்பட்டது