சொதி
Appearance
சொதி அல்லது பாற்சொதி என அழைக்கப்படும் உணவு, தேங்காய்ப்பால் அல்லது பசும்பாலில் வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, கறிவேப்பிலை போன்ற சுவைபொருட்கள் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்யப்படும் ஒரு நீர் உணவு. இது பொதுவாக இலங்கையிலும், இலங்கையர் புலம் பெயர்ந்த இடங்களிலும் இடியப்பம், பிட்டு, சோறு போன்றவற்றுடன் சேர்த்து உண்ணப்படும் உணவு ஆகும்.
இது ஒரு நீர் உணவாக உள்ளதால் குழந்தைகளும் சிறுவர்களும் இதனை விரும்பி உண்பது வழக்கம்.
திருமண விருந்தில் சொதி
[தொகு]தமிழ்நாட்டில் முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் சில பிரிவினரின் திருமண விருந்தில் சொதி, பரிமாறப்படுகிறது. திருமண நிகழ்விற்கு அடுத்த நாள் மணமகனின் வீட்டார் சார்பில் நிகழ்த்தப்படும் மறுவீட்டு விருந்தில் சொதிக் குழம்பு பரிமாறப்படும்.[1]
வகைகள்
[தொகு]- பால் சொதி
- மீன் சொதி
- இறால் சொதி
- தக்காளிச் சொதி
- அகத்திக்கீரைச் சொதி
- மாங்காய்ச் சொதி
சான்றுகள்
[தொகு]- ↑ "திருநெல்வேலி கல்யாணத்தில் சொதி". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.