உள்ளடக்கத்துக்குச் செல்

முந்தரி பர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்தரி பர்பி
காஜூ கத்லி
மாற்றுப் பெயர்கள்காஜூ கத்ரி, காஜூ பர்பி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்திய துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்திய உணவுமுறை, வங்கதேசம் உணவுமுறை, பாக்கித்தான் உணவுமுறை
முக்கிய சேர்பொருட்கள்முந்திரி, சர்க்கரை, நெய்
வேறுபாடுகள்குங்குமப்பூ பேடா, பர்பி, பிஸ்தா பர்பி

முந்தரி பர்பி (Kaju katli) அதாவது "காஜூ கத்லி"), காஜு பர்பி என்றும் அழைக்கப்படுகிறது. இது பர்பி போன்ற ஒரு இந்திய இனிப்பு ஆகும். கஜு என்றால் முந்திரி என்றும் பர்பி என்பது பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பிற பொருட்களுடன் (உலர்ந்த பழங்கள் மற்றும் லேசான மசாலாப் பொருட்கள்) சேர்ந்த பாலை சூடாக்குவதன் மூலம் கெட்டியாக்கித் தயாரிக்கப்படுவது. கேசர் காஜு கத்லி என்பது குங்குமப்பூ சேர்க்கப்பட்ட முந்திரி பர்பி ஆகும்.

செய்முறை

[தொகு]

காஜூ கத்லி தயார் செய்ய முந்திரிப்பருப்பானது கணிசமான நேரம் (பொதுவாக இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைத்து அரைக்கப்படுகிறது. சர்க்கரைக் கரைசல் நூல் பதம் வரும் வரை இளம் சூட்டில் கொதிக்கவைக்கவேண்டும். இதனுடன் அரைக்கப்பட்ட முந்திரி, நெய், குங்குமப்பூ மற்றும் உலர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகிறது.[1] பசை போன்ற இந்த கலவையினை ஒரு தட்டையான பாத்திரத்தில் பரப்பி சாய் சதுர துண்டுகளாக வெட்டப்படுகிறது. துண்டுகள் பொதுவாக உண்ணக்கூடிய வெள்ளிப் படலத்தால் அலங்கரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்ட காஜூ கத்லி இனிப்பு பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பொருட்களின் விகிதாச்சாரத்தைப் பொறுத்துக் காணப்படும். காஜூ கத்லி பாரம்பரியமாகத் தீபாவளியின் போது உண்ணப்படுகிறது.[2][3]

சாதாரண பர்பிகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பர்பி சற்றே விலை கூடுதலான சிற்றுண்டி. எனினும் பண்டிகை காலம் திருமண விழாக்களில் தவறாமல் இடம்பெறும்.

வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம்

[தொகு]

காஜு கட்லி / காஜு பர்ஃபி இந்தியாவில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது முகலாய காலத்தைச் சேர்ந்தது. காஜு பர்ஃபிக்கான செய்முறையை முதன்முதலில் இந்தியாவிற்கு பாசீகர்கள் அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது, அவர்கள் பாரசீக இனிப்புகளை உருவாக்கும் நுட்பத்தை முகலாய அரசவைகளுக்கு கொண்டு வந்தனர். முகலாய பேரரசர்கள் இனிப்புகளை விரும்பினர். மேலும் காஜு பர்ஃபி விரைவில் அவர்களின் அரசவைகளில் பிரபலமான இனிப்பு வகையாக மாறியது. காலப்போக்கில், காஜு பர்ஃபிக்கான செய்முறை இந்தியா முழுவதும் பரவி, நாடு முழுவதும் பிரியமான இனிப்பாக மாறியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bladholm, Linda (12 August 2000). The Indian grocery store demystified. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1580631436.
  2. Kapoor, Sanjeev. Sweet Temptations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8179915700.
  3. https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2019/oct/25/diwali-special-sweet-how-to-make-kaju-katli-at-home-3262992.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்தரி_பர்பி&oldid=3702157" இலிருந்து மீள்விக்கப்பட்டது