இலட்டு
(லட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தட்டு முழுவதும் இலட்டுகள் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | பலகாரம் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
வேறுபாடுகள் | பருப்பு மாவு, இரவை |
பிற தகவல்கள் | பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படும் |

இலட்டு (Laddu), ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.
இலட்டுகளின் வகைகள்[தொகு]
- திருப்பதி லட்டு - ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை கோவிலில் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும் இலட்டு
- மோட்டிசூர் இலட்டு - பீகார் மாநிலத்தில் செய்யப்படும் ஓர் இலட்டு வகையாகும்.
- ரவா இலட்டு - ரவையும் சர்க்கரையும் நெய்யும் கொண்டு செய்யப்படும் இலட்டாகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
- இலட்டு செய்யும் முறை-அறுசுவை.காம் பரணிடப்பட்டது 2006-08-19 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)