ஊறுகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aavakaaya
Aavakaya.JPG
Alternative names Aavakai
தொடங்கிய இடம் தென்னிந்தியா
பகுதி ஆந்திரப் பிரதேசம்/தமிழ்நாடு
Main ingredients மா, aavalu (powdered mustard), powdered red chilli, salt and oil,allam
வேறுபாடுகள் Ginger
Cookbook: Aavakaaya  Media: Aavakaaya

இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் ஊறுகாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்கு தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கே ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கிடைக்கும் அனைத்து வகைக் காய்களிலும் ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடன் கூடிய காய்கள் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் இந்தியா முழுவதும் பிரபலமானது.

முறையாக பாதுக்காக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் ஒரு பண்டம் இது. அதேசமயம், கவனக்குறைவாக இருந்தால் ஒரே நாளிலேயே கெட்டுப்போய்விடும். ஊறுகாயை காற்றுப்புகாத கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் அடைத்து வைத்தல் நல்லது. கண்ணாடி, பீங்கான் கரண்டிகளை எடுப்பதற்கு பயன்படுத்தினால் ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது. ஈரம் பட்டால் விரைவில் கெட்டுப்போகும். எப்போதும் எண்ணெய்யில் மூழ்கி இருக்குமாறு செய்வதன் மூலம், ஒரு சில ஊறுகாய்களை பூஞ்சை பிடிக்காமல் காக்கலாம்.

மருத்துவ முக்கியத்துவம்[தொகு]

ஊறுகாய், அப்பளம் போன்றவை உப்பு அதிகம் உள்ள உணவுகளாதலால் மிகை இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு உள்ள நோயர்கள் ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் வகைகள்[தொகு]

  • மாங்காய் ஊறுகாய்
  • எலுமிச்சை ஊறுகாய்
  • நெல்லிக்காய் ஊறுகாய்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊறுகாய்&oldid=2096802" இருந்து மீள்விக்கப்பட்டது