கூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூட்டு
Cabbage kootu.jpg
வகைStew
தொடங்கிய இடம்இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்காய்கறிகள், பருப்புகள்
Cookbook: கூட்டு  Media: கூட்டு

அறுசுவையான உணவில் கூட்டு என அழைக்கப்படும் காய்கறிகளும் பருப்பும் சேர்ந்து சமைக்கப்படும் உணவு பதார்த்தர்த்திற்கு சிறப்பான இடமுண்டு. இது மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், குழம்பு போல தண்ணீராகவும் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் சமைக்கப்படும் பண்டமாகும். சாப்பிடப்பழகும் குழந்தைகள் முதல் ஜீரணமாக கஷ்டப்படும் வயதானோர் வரை எந்த வயதிலுள்ளோரும் சாப்பிடக்கூடிய அருமையான பதார்த்தமாகும்.

கூட்டுடன் சாதம் என்பது ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. காய், பருப்பு, தேங்காய், உப்பு, காரம் என்று எல்லாம் கலந்த கலவையில் கூட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் குறைவாக உபயோகிப்பதால் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. செய்வதற்கும் மிகவும் எளிதானது. கூட்டிற்கு பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கோஸ், வெள்ளரிக்காய், மற்றும் கத்திரிக்காய் போன்ற பல காய்கள் பயன்படுத்தப் படுகின்றன. இரண்டு காய்களை சேர்த்தும் கூட கூட்டுகள் செய்வதுண்டு…

விருந்து சாப்பாடு என அழைக்கபடும் உணவில் வேக வைத்த சாதம் (சோறு), சாம்பார், ரசம், அவியல், பொரியல், அப்பளம், தயிர், பாயாசம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றுடன் கூட்டும் இருந்தால் தான் அந்த விருந்தே முழுமையடையும்.

எல்லா வகையான கூட்டுகளும் ஏதாவது ஒரு காய்கறியும் ஒரு பருப்பும் சேர்ந்தே சமைக்கப்படுவதாகும். கூட்டு பெரும்பாலும்

  • பொரிச்ச கூட்டு
  • அரைத்து விட்ட கூட்டு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூலப்பொருட்கள் இரண்டு வகையிலும் காய்கறி மற்றும் பருப்புதான்

பொரிச்ச கூட்டு[தொகு]

எந்த மூலப்பொருளையும் அரைக்காமல் அப்படியே வேகவைத்து சமைப்பது பொரிச்ச கூட்டு என்று அழைக்கப்படுகிறது. பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளும் வறுத்த வெள்ளை உளுந்து மற்றும், மிளகு, காய்ந்த மிளகாய் வத்தல், தேங்காய் போன்றவைகளே இத்தகைய கூட்டு செய்ய தேவையான அடிப்படை பொருட்களாகும்.

அரைத்து விட்ட கூட்டு[தொகு]

அரைத்த மசாலா பொருட்களைச் சேர்த்து சமைப்பது அரைத்து விட்ட கூட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பருப்பு, சீரகம் மற்றும் தேவையான அனைத்து மசாலாப் பொருட்களும் அரைத்து வைத்து காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பதே அரைத்து விட்ட கூட்டு ஆகும். இதன் பெயரை வைத்தே இதனை அறியலாம்.

மேலும் இந்தியாவின் ஓவ்வொரு மாநிலத்திலும் கூட்டு செய்யும் முறைகளில் சில வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் கூட்டு செய்வதற்கான அடிப்படை பொருட்கள் இவைகளே.


கீரைக்கூட்டுகள்[தொகு]

காய்கறிகள் மட்டுமல்லாது அனைத்து கீரை வகைகளினாலும் பல்வேறு கூட்டுகள் செய்யலாம். தேவையான பொருட்கள்:

கீரை- 1 கட்டு எந்த வகை கீரையாக இருந்தாலும் துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது) மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு எண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை:

  • கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழுவி கொள்ளவும்.
  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். *நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், கீரை பருப்பு கூட்டு தயாராகிவிடும்.

இதே முறையில் கீரைக்கு பதிலாக காய்கறிகளையும் பயன்படுத்தி கூட்டு சமைக்கலாம்.


கூட்டுகளின் சிறப்புகள்[தொகு]

திருமண வீடுகளிலும் பண்டிகை காலங்களிலும் கூட்டுகள் சிறப்பாக செய்யப்பட்டு சாதங்களுடன் பரிமாறப்படும். கூட்டுகளின் எண்ணிக்கையை பொருத்து திருமணங்களின் பிரமாண்டங்களை கணிப்பவர்களும் உண்டு. கேரள மாநிலத்தின் சிறப்பான பண்டிகையான ஓணம் பண்டிகையில் பல்வேறு காய்கறிகளில் விதவிதமாக ஏழு முதல் இருபத்தியொரு கூட்டுகள் செய்து பரிமாறுவர். இதன்மூலம் கூட்டுகளின் சிறப்பை அறியலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு&oldid=2885399" இருந்து மீள்விக்கப்பட்டது