உள்ளடக்கத்துக்குச் செல்

பாயசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாயாசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாயசம்
மாற்றுப் பெயர்கள்கீர், ஷீரம், பாயேஷ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்குமப்பூ
வேறுபாடுகள்கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு

பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.[1] பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. "செய்முறை". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயசம்&oldid=4051890" இலிருந்து மீள்விக்கப்பட்டது