உள்ளடக்கத்துக்குச் செல்

சுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவையறி கலம்

சுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும். இது ஐந்து உணர்வுகளின் ஒன்றாகவும் காணப்படுகிறது.

சுவை வரைப்படம்

[தொகு]

நாவில் அடிப்படைச் சுவைகளை அறியும் பகுதிகள் உள்ளனவென முன்னர் நம்பிக் கொண்டிருந்த போதும் அது தற்போது பிழையென அறியப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]

தமிழர் முறைப்படியான அடிப்படைச் சுவைகள்

[தொகு]

சுவை மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு என்பனவாகும். தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.

இனிப்பு என்பது ஒரு சுவை. இது ஆறுசுவைகளுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்பு பண்டம் என்று கூறுவர். மாசத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டது ஆகும்.

கார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தண்மையைக் கொண்ட உணவை கார்ப்பு சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும்.

கசப்பு மனிதர்களின் நாவினால் உணரப்படக்கூடிய சுவைகளில் ஒன்றாகும். இந்த சுவை பொதுவாக விரும்பபடாத சுவையாகும். இருப்பினும், சில சமையல்களில் இவற்றை சேர்ப்பது உண்டு. இந்த சுவை பொதுவாக வெறுக்கப் படுவதால், "கசப்பு" என்ற சொல், ஒரு மனிதரின் ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள வெறுப்புணர்வை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

புளிப்பு என்பது ஆறு வகைச் சுவைகளிள் ஒன்று. எடுத்துக்காட்டாக புளிய மரத்தின் கனி புளிப்புச் சுவையைக் கொண்டது இது தமிழர் சமையலில் பெரும் பங்குவகிக்கிறது. உதாரணமாக இரசம் புளியை முலப்பொருளாகக் கொண்டு செய்யப்படுகின்றது.

உப்பு, அல்லது சோடியம் குளோரைடு, உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், ஆனால் தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது. உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது.

துவர்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. பாகற்காய், காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் தாம்புலம் இடுவது( வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு கலந்த கலவை) விரும்பி உண்பார்கள். இதில் உள்ள பாக்கு துவர்ப்பு தன்மைக் கொண்டது ஆகும்.

மருத்துவகுணம்

[தொகு]

தினம் அறுசுவையையும், அனுபவிக்காத உடல் கெடும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மேலும் காண்க

[தொகு]

அறுசுவை

உமாமிசுவை

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவை&oldid=3300772" இலிருந்து மீள்விக்கப்பட்டது