பூரி (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூரி
Puri.jpg
பூரி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்ஆட்டா,
கோதுமை
Cookbook: பூரி  Media: பூரி

பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது.

வகைகள்[தொகு]

  • பட்டூரா என்றழைக்கப்படும் பெரிய அளவிலான பூரி, மைதா மாவினால் தயாரிக்கப்படும், இது பூரியை விட மும்மடங்கு அளவில் பெரியதாக இருக்கும்.
  • இந்திய மாநிலமான ஒரிசாவில் பாலியாத்ரா விழாவின் பொழுது பெரிய அளவிலான பூரி செய்யப்படுகின்றது, இது துங்காபூரி என்றழைக்கப்படுகிறது(ஒரியா: ଠୁଙ୍କା ପୁରି).[1][2][3][4][5]
  • வட இந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மற்றொரு வகையான பூரி தயாரிக்கப்படுகிறது, இதன் பெயர் பேத்வி, இது சிறிது உப்பாகவும், விறைப்பாகவும் தயாரிக்கப்படுகின்றது, பொதுவாக இதனுள் பயறுகளை வைத்து அடைக்கப்படுகிற்து. [6]
  • பானிபூரி, அளவில் மிகச்சிறியதாகவும், இதில் பூரி மாவு மிருதுவாக்க ரவை சேர்க்கப்படுகிறது.
  • மேற்கு வங்காளம், ஒரிசாவில் மற்றொரு பிரபலமான பூரி வகை லூச்சி என்றழைக்கப்படுகிறது.
  • தெருவோர வியாபாரிகளால் சேவ் பூரி என்ற சிற்றூண்டி விநியோகிக்கப்படுகின்றது.

பெயர் காரணம்[தொகு]

பூரி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: குஜராத்தி: પૂરી, அசாமி পুৰি, (puri), இந்தி: पूरी (pūrī), மராத்தி: पूरी (pūrī), கன்னடம்: ಪೂರಿ (pūri), மலையாளம்: പൂരി, பர்மியம்: ပူရီ (pūrī), நேபாளி: पूरी (puri), ஒரியா: ପୁରି (puri), பஞ்சாபி: ਪੁੜੀ (pūḍī), தமிழ்: பூரி (pūri), தெலுங்கு: పూరి (pūri), and உருது: پوری (puri).

மெல்லிய ரொட்டியை எண்ணெயில் பொரித்து, கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு புட்டு சேர்த்து சாப்பிடலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_(உணவு)&oldid=3254721" இருந்து மீள்விக்கப்பட்டது