பொங்கல் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொங்கல்
Pongali.JPG
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி தென்னிந்தியா
முக்கிய உட்பொருட்கள் அரிசி, பாசிப்பருப்பு, பால்(பொங்கல் பண்டிகையின், பொங்கல்)
வேறுபாடுகள் சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல்
Cookbook: பொங்கல்  Media: பொங்கல்

பொங்கல் (ஈழத்து வழக்கு: புக்கை) என்பது தென்னிந்தியாவில் உண்ணப்படும் அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல் என வகைப்படும். மிளகு பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.

இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒண்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கும்.

பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது.

உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால், பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கல்_(உணவு)&oldid=1975118" இருந்து மீள்விக்கப்பட்டது