சந்தா சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சந்தா சாகிப் (இறப்பு: 14 யூன் 1752) 1749 முதல் 1752 வரை முகலாயப் பேரரசின் கீழ் போர்வீரன், திவான், நவாப் என்பன உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். இவரது இயற் பெயர் உசெயின் தோசுத் கான். இவர் கர்நாடக நவாப் தோசுத் அலி கானின் மருமகன். இவரின் கீழ் அவ்வரசில் திவானாக இருந்தார். சந்தா சாகிப், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் கர்நாடகப் பகுதியை நவாப் சுல்பிகார் அலி கானின் கீழ் ஆண்ட முசுலிம் நாயிற் சமூகத்தைச் சேர்ந்தவர். பிரான்சியருடன் கூட்டு வைத்திருந்த இவர், மதுரை நாயக்கர்களின் அரசை இணைத்துக்கொண்டதுடன், தஞ்சாவூரின் நவாப் ஆகவும் தன்னை அறிவித்துக்கொண்டார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற மராட்டியத் தாக்குதல்களால் இவர் வலுவிழக்க நேர்ந்தது. இதனால், நசிர் யுங்குடன் கூட்டுச் சேர்ந்திருந்த முகமத் அலி கான் வாலஜாவினால் தோற்கடிக்கப்பட்டார். மேலும், பிரித்தானியத் தளபதி ராபர்ட் கிளைவினாலும், மராட்டியப் பேரரசினாலும் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் தனது இழப்பைச் சரிசெய்ய முயன்றார். ஆனால் அவரது தஞ்சாவூர்ப் படையைச் சேர்ந்த இந்து வீரர்கள் விளைவித்த கலகம் ஒன்றின்போது தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.[1][2]

குறிப்புக்கள்[தொகு]

  1. Brittlebank, p. 22
  2. Dodwell, H. H. (ed), Cambridge History of India, Vol. v.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தா_சாகிப்&oldid=1618216" இருந்து மீள்விக்கப்பட்டது