திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
| தேவாரம் பாடல் பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் | |
|---|---|
![]() | |
| புவியியல் ஆள்கூற்று: | 11°06′25″N 79°34′12″E / 11.1069°N 79.5699°E |
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி |
| பெயர்: | திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருமணஞ்சேரி |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | உத்வாகநாதர் (அருள்வள்ளநாதர்) |
| தாயார்: | கோகிலா (கோகிலாம்பாள்) |
| தல விருட்சம்: | கருஊமத்தை |
| தீர்த்தம்: | சப்தசாகரம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | அப்பர், சம்பந்தர் |
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்[1] என்பது அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும்.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
கோயில் அமைப்பு
[தொகு]
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
அருகில் உள்ள திருத்தலம்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]| திருமணஞ்சேரி | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: எதிர்கொள்பாடி |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்குறுக்கை |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 25 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 25 | ||
