திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கானூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | செம்மேனிநாதர், கரும்பேசுவரர் |
தாயார்: | சிவலோகநாயகி |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | கொள்ளிடம், வேததீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 56வது தலம் ஆகும்.
தல வரலாறு
[தொகு]ஒரு சமயம் இவ்வூரில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது கோயில் முழுவதும் மூழ்கிய நிலையில், ஒரு கரும்பு மட்டுமே அங்கு முளைத்திருக்க அங்கு தோண்டியபோது மணலில் கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
அம்பிகை சிவயோகநாயகி எனும் பெயரில் அருள்பாலிக்கிறாள். இறைவனை நோக்கி தவமிருந்ததால் அப்பெயர் பெற்றாள்.
அமைப்பு
[தொகு]கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரமும் ஒரு பிரகாரமும் கொண்ட கோயிலாகும். கருவறை விமானம் உருண்டை வடிவிலான ஏகதளம் கொண்டதாகும்.
அம்பாள் திருமேனி சாளக்கிராமக் கல்லினால் ஆனது. பாடல் பெற்ற தலமாகும்.
நடைத் திறக்கும் நேரம்
[தொகு]காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
வழிபட்டோர்
[தொகு]அக்கினி வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.
இவற்றையும் பார்க்க
[தொகு]- சிவத் தலங்கள்
- தேவாரத் திருத்தலங்கள்
- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
- திருஞான சம்பந்தர்
- சுந்தரர்
- திருநாவுக்கரசர்
உசாத்துணை
[தொகு]தஞ்சாவூர் மாவட்டம், திருக்கோயில்கள் வழிகாட்டி, இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு 2014.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- தலவரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2008-04-04 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் வரலாறு
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் அன்பிலாலந்துறை |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 56 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 56 |