உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
பெயர்:திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பனந்தாள்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்
தாயார்:பெரியநாயகி, தாலவனேஸ்வரி, பிருகந்நாயகி
தல விருட்சம்:பனை மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், ஐராவததீர்த்தம், தடாகைதீர்தம், நாககன்னிகை தீர்த்தம், மண்ணியாறு உட்பட பலதீர்த்தம்.
ஆகமம்:காமிய ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

தல வரலாறு

[தொகு]

இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். இவ்வாலயம் திருமணத்தடை குழந்தை இன்மைக்கு பரிகார தலமாக விளங்குகிறது. தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோரும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குணிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அப்போதய மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனாரி இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார். மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தடாகைக்காக தலை சாய்ந்ததும் குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது. ஸ்ரீகுமரகுருசாமிகள் நிறுவிய காசிமடம் இங்குதான் உள்ளது. பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்ட தலம்.

அமைவிடம்

[தொகு]

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும்.

சிறப்புகள்

[தொகு]

தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி மாலை சாத்தும்போது ஆடை நெகிழ இறைவன் தனது திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றருளினார் என்பதுவும் பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அந்நிலைய மாற்றினார் என்பதுவும் தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]