உள்ளடக்கத்துக்குச் செல்

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கானாட்டுமுள்ளூர்
பெயர்:கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கானாட்டம்புலியூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பதஞ்சலீஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:கோல்வளைக்கையம்பிகை
தல விருட்சம்:எருக்கு
தீர்த்தம்:சூர்யபுஷ்கரிணி
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது. மிகப் பழைய கோயிலான இது பாழடைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் பதஞ்சலிநாதர், இறைவி கானார்குழலி.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]