அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்பிலாலந்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்

அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை) அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயியில் உள்ள இறைவன் சத்தியவாகீஸ்வரர், இறைவி சவுந்திரநாயகி. இத்தலத்தில் காயத்திரி தீர்த்தம் என்ற தீர்த்தமும், தலமரமாக ஆலமரமும் உள்ளது.

வழிபட்டோர்[தொகு]

பிரமன், வாசீக முனிவர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.

படிமக் கோப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]