உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கலிக்காமூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கலிக்காமூர்
பெயர்:அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:அன்னப்பன்பேட்டை (வில்வவன நாதர்)
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:அழகம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சந்திர தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:மாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 8 வது தேவாரத்தலம் ஆகும்.

ஊர்ப் பெயர்க் காரணம்

[தொகு]

"கலி" (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது.

தலச் சிறப்பு

[தொகு]

இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]