உள்ளடக்கத்துக்குச் செல்

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமயேந்திரப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
பெயர்
புராண பெயர்(கள்):திருமகேந்திரப் பள்ளி
பெயர்:அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
அமைவிடம்
ஊர்:மகேந்திரப்பள்ளி
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருமேனியழகர்
தாயார்:வடிவாம்பிகை
தல விருட்சம்:கண்ட மரம், தாழை
தீர்த்தம்:மயேந்திர தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்தரம், திருக்கார்த்திகை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் (Mahendrapalli Tirumeni Azhagar Temple) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும்.

அமைவிடம்

[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது சிவத்தலமாகும். கொள்ளிடம் ஆற்றுக்குக் கிழக்கில், சீர்காழி-சிதம்பரம் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் திருமேனியழகர் என்றழைக்கப்படுகிறர். இறைவி வடிவாம்பிகை ஆவார். சூரியன், சந்திரன், பிரம்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.[1]

தொன்மம்

[தொகு]

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

அனைத்து வகையான விலங்கினங்களும் இறைவனை வழிபட்டு முத்தி பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. கோயிலுக்கு முன்பாக இந்திர தீர்த்தம் உள்ளது. அகில், வெண்கடம்பு போன்ற மரங்களும், தாழை, நீர்முள்ளி, குவளை போன்ற தாவர வகைகளும் கடலோரக்காற்றிலிருந்தும், சூறாவளிக்காற்றிலிருந்தும் பாதுகாக்கும் பெருமையுடைய தலம் என்று ஞானசம்பந்தர் இத்தலம் குறித்துக் கூறுகிறார்.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]

தினமலர்க் கோயில்கள்