உள்ளடக்கத்துக்குச் செல்

சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவன் கோயில் (Siva temple) என்பது இந்துக் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் தெய்வம் சிவன் (லிங்கத் திருமேனி) அம்சமாக இருக்கும் பட்சத்தில் அக்கோயில் சிவன் கோயில் என்றழைக்கப்படுகிறது. சிவன் லிங்கம் என்பது மனிதர்களுடைய ஆத்மா என்று சொல்கிறது. ஆத்மா என்பது ஆண் மற்றும் பெண் என்னும் வேறுபாடு கிடையாது. ஆண் மனிதர்களுக்கும் ஆத்மா உண்டு மற்றும் பெண் மனிதர்களுக்கும் ஆத்மா உண்டு. கடவுள் சிவனை வணங்கும் பக்தர்கள் எந்த உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது. எந்த உயிர் மனதையும் பண்படப்பேசக்கூடாது. அந்த அம்சமானது வெவ்வேறு திருநாமங்கள் கொண்டு காணப்படுகின்றது. உதாரணமாக, சுந்தரேசுவரர், நடராசர், ஆதி சொக்கநாதர், ஏகாம்பரநாதர், பிரம்மபுரீசுவரர், அகத்தீசுவரர், ஐயாறப்பர், லிங்கேசுவரர், கபாலீசுவரர், காசிவிசுவநாதர், கைலாசநாதர், சோமநாத சுவாமி, அக்கினீசுவரர், வெள்ளீசுவரர், ஆதிமூலேசுவரர், வைத்தியநாத சுவாமி, நீலகண்டேசுவரர், நாகநாதர், சொர்ணபுரீசுவரர், சோமலிங்கேசுவரர், லிங்கோற்பவர், சந்திரசேகரர், கந்தழீசுவரர் மற்றும் பட்டீசுவரர் ஆகிய திருநாமங்களில், கோயில்களில் சிவன் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலானது, சைவ வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பூசைகள் நடைபெறும் தலமாக விளங்குகிறது.

மதுரையில், சுந்தரேசுவரர் என்ற திருநாமம் பெற்று மீனாட்சி அம்மன் கோயிலில் சிவன் வீற்றிருக்கிறார்.[1] காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார்.[2] சென்னையின் மயிலாப்பூரில், கபாலீசுவரர் கோயிலில் சிவன் காட்சியளிக்கிறார்.[3] சிதம்பரத்தில், நடராசர் கோயிலில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.[4] சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கும் மக்களுக்கு நல்ல ஒழுக்கம் வளர்க்கும். மனிதர்களுக்கு மனித நேயம் குணம்மும் வளர்க்கும். மன அமைதி வளர்க்கும்.

தமிழ்நாட்டில் 575 சிவன் கோவில்கள் உள்ளது.

தமிழ்நாடு சிவன் கோவில்கள் பட்டியல்கள்:-

  1. சென்னை மாவட்டத்தில் 15 சிவன் கோவில்கள் உள்ளது.
  2. செங்கல்பட்டு மாவட்டத்தில் 145 சிவன் கோவில்கள் உள்ளது.
  3. வட ஆற்காடு மாவட்டத்தில் 25 சிவன் கோவில்கள் உள்ளது.
  4. தென் ஆற்காடு மாவட்டத்தில் 40 சிவன் கோவில்கள் உள்ளது.
  5. சேலம் மாவட்டத்தில் 20 சிவன் கோவில்கள் உள்ளது.
  6. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 சிவன் கோவில்கள் உள்ளது.
  7. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 45 சிவன் கோவில்கள் உள்ளது.
  8. தஞ்சாவூர் மாவட்டத்தில் 155 சிவன் கோவில்கள் உள்ளது.
  9. மதுரை மாவட்டத்தில் 40 சிவன் கோவில்கள் உள்ளது.
  10. திருநெல்வேலி மாவட்டத்தில் 50 சிவன் கோவில்கள் உள்ளது.
  11. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சிவன் கோவில்கள் உள்ளது.

மொத்தம் எண்ணிக்கையில் ஐந்நூற்று ஐம்பத்தைந்து சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

ஓம் நமச்சிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meenakshi Sundareswarar Temple : Meenakshi Sundareswarar Meenakshi Sundareswarar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
  2. "Ekambara Nathar Temple : Ekambara Nathar Ekambara Nathar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
  3. "Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000001].,". mylaikapaleeswarar.hrce.tn.gov.in. Retrieved 2023-01-09.
  4. "Chidambaram thillai natarajar Temple : Chidambaram thillai natarajar Chidambaram thillai natarajar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_கோயில்&oldid=4322691" இலிருந்து மீள்விக்கப்பட்டது