செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செம்பனார் கோயிலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,77,443 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 58,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 49 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]
- விசலூர்
- விளாகம்
- உத்தரங்குடி
- திருவிளையாட்டம்
- திருவிடைக்கழி
- திருக்களாச்சேரி
- திருக்கடையூர்
- திருச்சம்பள்ளி
- தில்லையாடி
- தலையுடையவர்கோயில்பத்து
- டி. மணல்மேடு
- செம்பனார்கோயில்
- சேமங்களம்
- பிள்ளைபெருமாநல்லூர்
- பரசலூர்
- பாகசாலை
- நெடுவாசல்
- நத்தம்
- நரசிங்கநத்தம்
- நல்லாடை
- நடுக்கரை
- முக்கரும்பூர்
- முடிகண்டநல்லூர்
- மேமாத்தூர்
- மேலபெரும்பள்ளம்
- மேலையூர்
- மாத்தூர்
- மருதம்பள்ளம்
- மாணிக்கப்பங்கு
- மாமாகுடி
- மடப்புரம்
- கொத்தங்குடி
- கிள்ளியூர்
- கிடங்கல்
- கீழ்மாத்தூர்
- கீழபெரும்பள்ளம்
- கீழையூர்
- காழியப்பநல்லூர்
- காட்டுச்சேரி
- கருவாழகரை
- கஞ்சாநகரம்
- காலமநல்லூர்
- காளகஸ்தினாதபுரம்
- கூடலூர்
- எரவாஞ்சேரி
- இலுப்பூர்
- இளையாலூர்
- எடுத்துக்கட்டி
- ஈச்சங்குடி
- சந்திரபாடி
- ஆறுபாதி
- அரசூர்
- அன்னவாசல்
- ஆலிவேலி
- ஆக்கூர்
- கிடாரங்கொண்டான்
- கொண்டத்தூர்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=19
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Sembanar%20Koil&dcodenew=14&drdblknew=9