மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் என்னும் நூல் பட்டர் என்பவரால் எழுதப்பட்டது.

வடநாட்டு வேதாந்தி ஒருவர் திருவரங்கம் வந்தார். பட்டர் அவருடன் வாதிட்டு, திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகம் 21-ஆம் பாடலாகிய 'மைவண்ண நறுங்குறிஞ்சிக் குழல்பின் தாழ' என்னும் பாடலுக்கு விரிவுரை கூறி வேதாந்தியை வென்றார். பட்டர் வாதிட்டு வென்ற அந்த விரிவுரை இந்த நூலாக உருப்பெற்றுள்ளது.[1] தோற்ற வேதாந்தி பட்டரின் சீடர் ஆனார். இந்த வேதாந்தியே நஞ்சீயர் எனப் போற்றப்படுபவர்.

இந்த விரிவுரை 800 எழுத்துக்கள் (கிரந்தங்கள்) கொண்டது என்பர். இது டெம்மி தாள் அளவில் 38 பக்கங்களாக அச்சிடப்பட்டுள்ளது. இவரது விரிவுரை எவ்வாறு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு:

வண்ண நறுங்குஞ்சி யித்தியாதி - நாயகனோடே கலந்து பிரிந்து பிரிவாள்ளாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி, உபாயத்தாலே உபவந்த்திலே பூக் கொய்யவென்று புறப்பட, நாயகனும் வேட்டைக்கு என்று வர, அங்கே உபயம் பலித்து, ஸம்சேஷம் ப்ரவிருத்தமாய் நாயகனும் போன அளவிலே, அத்தைக் கடைப்பிடித்துத் தலைக்காவலாக நின்ற தோழி வந்து கிட்டி, 'அவன் செய்தபடி என்' என்று கேட்க, அவளுக்குப் ப்ராவிருத்தமானபடியை நாயகி சொல்லுகிறாள், இப்பாட்டால்.

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

 1. பாடல் மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
  மகரஞ்சேர் குழைஇருபாடு இயங்கி ஆட
  எவ்வண்ணம் எஞ்சிலையே துணையா இங்கே
  இருவராய் வந்தார்என் முன்னே நின்றார்
  கைவண்ணம் தாமரை,வாய் வண்ணம் போலும்
  கண்ணிணையும் அரவந்தம் அடியும் அ்தே
  அவ்வண்ணத்(து) அவர்நிலைமை கண்டும் தோழி
  அவரைநாம் தேவரென்றே அஞ்சினோமே.