வைஷ்ணவ நம்பி மற்றும் திருக்குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்
பெயர்
பெயர்:திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்குறுங்குடி
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அழகிய நம்பிராயர் (வைஷ்ணவ நம்பி)
தாயார்:குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம்:திருப்பாற்கடல், பஞ்சதுறை
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
விமானம்:ஆனந்த நிலைய விமானம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். [1]

தலச்சிறப்பு[தொகு]

மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.

பெயர்க்காரணம்[தொகு]

வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.

அமைவிடம்[தொகு]

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தீர்த்தம்[தொகு]

கோவில் கோபுரம்

நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்[தொகு]