வீணை குப்பய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீணை குப்பய்யர் (1798–1860) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணை இசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடலாசிரியரும் ஆவார். இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் மாணவர். குப்பய்யர் தனது பாடல்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

குப்பய்யர் 1798ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் பிறந்தார். இவரின் தந்தை 'வீணை சாம்பமூர்த்தி' என்பவராவார். வீணை வாசிப்பதில் வல்லவரான தனது தந்தையிடம் வீணை வாசிக்கவும், இசையையும் கற்றார் குப்பய்யர். தெலுங்கு, சமக்கிருத மொழிகளையும் கற்றார். தியாகராஜரிடம் மாணவராகச் சேர்ந்து கிருதிகளை கற்றார். தியாகராஜர் ஒருமுறை குப்பய்யரின் இல்லத்திற்கு வந்திருக்கிறார். இந்த வருகையை நினைவுகொள்ளும் விதமாக தனது 3 மகன்களில் ஒருவருக்கு 'தியாகராஜர்' எனப் பெயரிட்டார் குப்பய்யர். இந்தக் குழந்தையே பின்னாளில் ‘திருவொற்றியூர் தியாகையர்’ என்றழைக்கப்பட்டது. குப்பய்யர் 1860ஆம் ஆண்டு தனது 62ஆம் வயதில் காலமானார்.

இசைப்பணிகள்[தொகு]

தியாகராஜரால் ஊக்குவிக்கப்பட்டு தெலுங்கு மொழியில் வர்ணங்கள், கிருதிகள், கீர்த்தனைகளை எழுதியவர் குப்பய்யர். 'கோபாலதாச' என்பது இவரின் முத்திரையாகும்.

இவர் செய்துள்ள இசை வடிவங்கள்:

  • வெங்கடேஸ்வர பஞ்சரத்னம்
  • காளஹஸ்தீச பஞ்சரத்னம்
  • சாமுண்டேஸ்வரி பஞ்சரத்னம்

இவரின் மாணவர்கள்:

  • கொத்தவாசல் வெங்கட்ராமையர்
  • பொன்னுசாமி
  • சீதாராமையர்

பெற்ற பட்டங்களும் சிறப்புகளும்[தொகு]

  • இசையின் பலதுறைகளில் சிறந்து விளங்கியதால், 'கானச் சக்ரவர்த்தி' எனும் பட்டம்.
  • நாராயணகௌளை இராகம் பாடுவதில் வல்லவர் என்பதால், 'நாராயணகௌளை குப்பய்யர்' என்றழைக்கப்பட்டார்.
  • 'பாடக குப்பய்யர்' என்றும் அழைக்கப்பட்டார்.

உசாத்துணை[தொகு]

  • பக்கம் எண்:592, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணை_குப்பய்யர்&oldid=2919376" இலிருந்து மீள்விக்கப்பட்டது