பண்டுவாசுதேவன்
பண்டுவாசுதேவன் | |
---|---|
உபதிஸ்ஸ நுவரவின் அரசன் | |
ஆட்சி | கி.மு. 504 – கி.மு. 474 |
முன்னிருந்தவர் | உபதிஸ்ஸ |
பின்வந்தவர் | அபயன் |
துணைவர் | பத்தகச்சனா |
வாரிசு(கள்) | அபயன் திச்சன் மற்றும் 8 மகன்கள் உன்மாதசித்திரா எனும் மகள் |
மரபு | விசயவம்சம் |
தந்தை | சுமித்த |
தாய் | மத |
பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்றுவித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன்பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.[1] இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான்.
மகாவம்சம் கூறும் பண்டுவாசுதேவன் இலங்கை வரவு
[தொகு]சிறிது கால இடைவெளியின் பின்னர் கலிங்கநாட்டில் இருந்த பண்டுவாசுதேவன் அழைத்து வரப்பட்டு முடி சூட்டப்பட்டான். இளவரசன் பண்டுவாசுதேவன் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான உதவியாளர்களுடன் வந்ததாக இலங்கைச் சரித்திரம் கூறும் நூலான மகாவம்சம் கூறுகின்றது. கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசியான புத்தகாஞ்சனா என்பவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டான். புத்தகாஞ்சனா பண்டைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும் புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரனுமான பாண்டா என்னும் அரசனுடைய மகளாவாள். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.
{{cite book}}
: Check date values in:|year=
(help)