உள்ளடக்கத்துக்குச் செல்

சுமாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமாலி (Sumali) இராவணின் தாய் வழி பாட்டனும், அரக்கர் குலத் தலைவனும் ஆவார். இவரது மகள் கைகேசி ஆவார். சுமாலியின் மூத்த சகோதரன் மால்யவான் மற்றும் இளைய சகோதரன் மாலி ஆவார்கள். சுமாலி தனதிரு சகோதரர்களுடன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் நோற்று, வரங்கள் பல பெற்று, தைத்தியர்களையும், ஆதித்தர்களையும் வென்று, தேவ தச்சர் விசுவகர்மன் துணையுடன் இலங்கை நாட்டில் அழகிய நகரத்தை உருவாக்கி வாழ்ந்தனர். பின்னர் இச்சகோதரர்களில் மாலி என்பவன் திருமாலால் கொல்லப்படுகிறான்.

சுமாலியின் மனைவி கேதுமதி பிரகஸ்தன், அகம்பனன், விகடன், காளிமுகம், தும்ராட்சசன், தண்டகன், சுபர்ஷ்வா, சாங்கிரதி, பிரகாசா, பர்கர்ணன் என பத்து ஆண் குழந்தைகளையும்; இராகா, புஷ்போதியாதா, கைகேசி மற்றும் கும்பிநாசி என ஐந்து பெண் குழந்தைகளையும் பெற்றாள். அதில் கைகேசி என்ற பெண் புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவன் மூலம் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகையைப் பெற்றாள். பல முறை தேவர்களை வென்ற சுமாலி, ஒரு முறை கந்தர்வர்கள் மற்றும் வசுக்களுடனான போரில் சுமாலி கொல்லப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாலி&oldid=3055001" இலிருந்து மீள்விக்கப்பட்டது