உள்ளடக்கத்துக்குச் செல்

அட்ட வசுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஷ்ட வசுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அட்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும்.[1]

வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள். இந்த அட்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும், அனலன் எனும் வசு நெருப்பையும், ஆப எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வசு சந்திரனையும், பிரபாசன் எனும் வசு வைகறையையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள்.[2].[3]

பீஷ்மர்

[தொகு]

இந்த அஷ்ட (எட்டு) வசுக்களில் பிரபாசன் எனும் வசு தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு - கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார் என்று மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.[4].

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ட_வசுக்கள்&oldid=4056422" இலிருந்து மீள்விக்கப்பட்டது